Published On: Mon, Jul 16th, 2012

தின பலன் 16 ஜூலை 2012

Share This
Tags

மேஷம்
இன்றைய தினம் மன உறுதியுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள்.கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள்,நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியுண்டு.குழந்தைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.தந்தையின் உடல் நிலை சீராகும்.வியாபாத்தில் பாக்கிகள் வசூலாகும்.வேலையாட்களின் ஆதரவு கிட்டும்.மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:பிங்க்,க்ரீம் வெள்ளை

ரிஷபம்
இரவு 7.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய கசப்பான சம்பங்கள் நினைவுக்கு வரும். சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. பண விஷயத்தில் கறாராக இருங்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:பிஸ்தா பச்சை,மஞ்சள்

மிதுனம்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. அரசு காரியங்கள் இழுபறியாகும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். இரவு 7.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:மெரூண்,வெள்ளை

கடகம்
புது முயற்சிகள் வெற்றி தரும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு உண்டு.கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.முன்கோபம் விலகும்.பிரியமானவர்களைச் சந்தித்து பொழுதைக் கழிப்பீர்கள்.அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,வெளிர் நீலம்

சிம்மம்
உங்களின் வெளிப்படையான பேச்சை அனைவரும் ரசிப்பார்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள்.பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள்.ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீகள்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். கன்னிப்பெண்களின் உடல்நிலை சீராகும். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:கிரே,இளஞ்சிவப்பு

கன்னி
இன்றையதினம் புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும்.கடன் பிரச்சனை களுக்கு தீர்வு காண்பீர்கள்.தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள்.முன்கோபம் விலகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். அரசுக் காரியங்களில் அனுகூலம் உண்டு.வீடு,வாகனச் செலவுகள் குறையும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெறுகும். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,கிளிப்பச்சை

துலாம்
இரவு 7.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். திட்டமிடாத செலவகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,ஊதா

விருச்சிகம்
கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயார் ஆதரித்துப் பேசுவர். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பர். இரவு 7.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள்,வெளீர்நீலம்

தனுசு
முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.பணப்பற்றாக்குறை நீங்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.வாகனத்தை சீர்செய்வீர்கள்.கன்னிப்பெண்களுக்கு பெற்றொரின் ஆதரவு கிட்டும்.மாணவர்கள் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.வாகனவசதி பெருகும். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:பிங்க்,வெள்ளை

மகரம்
தன்னம்பிக்கை துளிர்விடும்.தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள்.வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியுண்டு. வருங்காலத் திட்டங்களைப் பற்றி நண்பர்களிடம் விவாதிப்பீர்கள்.தாயாரின் உடல்நிலை சீராக இருக்கும்.கண் எரிச்சல்,தூக்கமின்மை விலகும்.உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:மிண்ட்கிரே,வைலெட்

கும்பம்
இன்றையதினம் திறம்பட செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள்.கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும்.வியாபாத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள்.அரசு விஷயங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும்.வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். முன்கோபம்,வீண் டென்ஷன் விலகும். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,நீலம்

மீனம்
இன்றையதினம் நம்பிக்கைக்குறியவர்களின் சந்திப்பு நிகழும்.குடும்பத்தில் அமைதி நிலவும்.கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி,சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு.மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,ஆலிவ் பச்சை

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

கருத்துக் கணிப்பு

செக்ஸ் இல்லாத காதல் சாத்தியமா?

View Results

Loading ... Loading ...