உலகிலேயே ஆயுள்வேதம், மசாஜ்களுக்கு பெயர் போன மாநிலங்களில் கேரளாவும் ஒன்று.
கேரளா மாநிலத்தில் ஆயுர்வேத சிகிச்சை சிறப்புடன் விளங்குவதை நம் நாட்டவர்களை விட வெளிநாட்டினர் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.
குறிப்பாக ஆயுர்வேத வைத்தியம், மூலிகைகள், மூலிகை நிவாரணிகள், ஆயுர்வேத மசாஜ்கள், ஆயுர்வேத வைத்திய நிலையங்கள், ஆயுர்வேத வைத்தியர்கள் குறித்து இப்புகைப்படங்கள் உணர்த்துகின்றன.
வெளிநாடுகளில் ஓய்வில்லாமல் வேலை செய்பவர்கள் நன்றாக ஓய்வெடுத்து ஆயுர்வேத மசாஜ்கள் செய்வதற்கு அதிகமாக கேரளாவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வகையான சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கேரளாவுக்கு வந்து செல்வதாக கேரளா சுற்றுலாத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.












