Breaking News
Home / latest-update / திடீர் பணிப் புறக்கணிப்பில் குதித்த கல்வியங்காடு சந்தை வியாபாரிகள்..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

திடீர் பணிப் புறக்கணிப்பில் குதித்த கல்வியங்காடு சந்தை வியாபாரிகள்..!!

கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படவில்லை என்று தெரிவித்துக் யாழ்ப்பாணம், கல்வியங்காடு பொதுச் சந்தை வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை (07) காலை கடையடைப்பில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஆண்டு மார்கழி மாதம் 18ஆம் திகதி கல்வியங்காடு பொதுச் சந்தை புதிதாகத் திறக்கப்பட்டது.பொதுச் சந்தையைப் பொறுப்பேற்ற குது்தகையாளர்கள் சந்தையை ஒழுங்காகப் பராமரிப்பதில்லை என்று வியாபாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.வரி அறவீடுகள் இரு மடங்காக அறவிடப்படுகின்றன என்றும் சந்தை வியாபாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.




கடையடைப்பால் கல்வியங்காடு பொதுச் சந்தை முற்றாக முடங்கியது.
‘கல்வியங்காடு பொதுச் சந்தையின் பருத்தித்துறை வீதிகான வாயிலைப் பெரிதாக்குவது, கழிவகற்றலைச் சீராக முன்னெடுப்பது, வரி அறவீட்டைக் குறைப்பது என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தோம்.அவை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்த யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட், இன்னமும் அவற்றை நிறைவேற்றவில்லை’ என்று சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.கடையடைப்பால் கல்வியங்காடு பொதுச் சந்தை முற்றாக முடங்கியது. பொருள்களைக் கொள்வனவு செய்ய வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.




Check Also

பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே குறையலாம் – ப.சிதம்பரம் கருத்து

2019-20-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) கணித்து இருந்தது. தற்போது இந்தியாவின் …