முட்டை ரோல்

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு முட்டையானது உடலுக்கு மிகவும் சிறந்தது. இந்த முட்டை சில குழந்தைகளுக்கு சாப்பிடப் பிடிக்காது. இதுவரை அவர்களுக்கு முட்டையை ஆம்லேட், பொரியல் என்று தான் செய்து கொடுத்திருப்போம். அவர்களுக்கு சற்று வித்தியாசமாக அந்த முட்டையை ரோல் மாதிரி செய்து கொடுக்கலாமா!!!
தேவையான பொருட்கள் :
முட்டை – 1
சப்பாத்தி – 6
பெரிய வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி 2 நிமிடம் கிளரி இறக்கி வைக்கவும்.
அடுத்து செய்து வைத்துள்ள சப்பாத்தியில் இந்த முட்டை பொரியலை வைத்து சுருட்டவும்.
இப்போது சுவையான முட்டை ரோல் ரெடி!!!

Special Recent Posts

சிங்கம் 2- ஜூன் 2ல் இசை வெளியீடு

சிங்கம் 2- ஜூன் 2ல் இசை வெளியீடு

May 21st, 2013

சூர்யா நடித்துள்ள சிங்கம் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 2-ம் தேதி சென்னையில் வெளியாக[...]

பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் 2.7 கி.மீ நீள விண்கல்!

பூமியை நெருங்கிக் கொண்டிருக்கும் 2.7 கி.மீ நீள விண்கல்!

May 21st, 2013

சுமார் 2.7 கி.மீ நீளமுள்ள ஒரு விண்கல் (asteroid) பூமியை நெருங்கிக் கொண்டுள்ளது. இது வரும் மே 31ம் த[...]

ஐபிஎல் போட்டிகளில் இருந்து சகாஹா புனே வாரியஸ் அணி திடீர் விலகல்!

ஐபிஎல் போட்டிகளில் இருந்து சகாஹா புனே வாரியஸ் அணி திடீர் விலகல்!

May 21st, 2013

புனே வாரியர்ஸ் அணி ஐபிஎல்-6 போட்டிகளில் இருந்து விலகுவதாக அதன் உரிமையாளரான சஹாரா நிறுவனம் அறிவித்து[...]

காதலித்து ஏமாற்றியதாக காதலனை உதைத்து பொலிஸில் ஒப்படைத்த பெண்

காதலித்து ஏமாற்றியதாக காதலனை உதைத்து பொலிஸில் ஒப்படைத்த பெண்

May 21st, 2013

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை நடுவீதியில் அடித்து, உதைத்து பொலிஸ் நிலையத்தி[...]

தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் 2000 போலி மருத்துவர்கள்: அதிர்ச்சி தகவல்

May 21st, 2013

தமிழ்நாட்டில் இரண்டாயிரம் போலி மருத்துவர்கள் உள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டு உள்ளத[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*