தினபலன்கள் :10

மேஷம்
குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசப்பாருங்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : வைலெட், இளஞ்சிவப்பு

ரிஷபம்
எடுத்த வேலையை தடையின்றி முடிப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அனபுத்தொல்லைகள் விலகும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், வைலெட்

மிதுனம்
இன்று சொன்ன சொல்லைக் காப்பாற்ற அதிரடியாக செயல்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடல் நலம் சீராகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. பிரியமானவர்களைச் சந்தித்து மகிழுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக நடந்துக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, ப்ரெவுன்

கடகம்
சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசாங்க காரியங்களிலிருந்த பின்னடைவு நீங்கும். வயிற்றுவலி, மனஉளைச்சல் நீங்கும். விடாப்பிடியாக செயல்பட்டு பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் நம்பிக்கைக் கு‌ரியவர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், பிங்க்

சிம்மம்
சந்திராஷ்டமம் தொடர்வதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ப்ரவுன்

கன்னி
இன்று வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. கணவன் -மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். முன்கோபம், டென்ஷன் விலகும். எடுத்த காரியங்களை முடிக்கமுடியாமல் அவதிப்பட்ட நிலை மாறும். தந்தையின் உடல் நிலை சீராகும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அண்டை வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, பச்சை

துலாம்
இன்று மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப் படுத்துவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆடம்பரச்செலவுகளை குறைப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய சரக்குகளை புது யுக்தியால் விற்றுத்தீர்ப்பீர்கள். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன்

விருச்சிகம்
குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். காசுபணம் தேவையான அளவு இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவிர்கள். குலதெய்வப் பிராத்தனை களை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, இளஞ்சிவப்பு

தனுசு
அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் தந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். கணவன் – மனைவிக்குள் அனுசரித்து போவீர்கள். பணவரவு திருப்தி தரும். உடல் நிலை சீராகும். வெளிவட்டாரம் மகிழ்ச்சி தரும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வாகனப்பழுது நீங்கும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ஆரஞ்சு

மகரம்
இன்று உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்விர்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பு கிட்டும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் சந்தோஷம் கிட்டும். வேற்று மதத்தினரால் உதவி கிடைக்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, மஞ்சள்

கும்பம்
அதிரடி திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். வியாபாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ஊதா

மீனம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கரு நீலம்

Special Recent Posts

யுவதியை மிரட்டி பல தடவை வல்லுறவுக்குட்படுத்திய பிரபல தயாரிப்பாளர் கைது!

யுவதியை மிரட்டி பல தடவை வல்லுறவுக்குட்படுத்திய பிரபல தயாரிப்பாளர் கைது!

May 25th, 2013

யுவதியொருவரை தொடர்ச்சியாக மிரட்டி வல்லுறவுக்குட்படுத்தி வந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரொருவரை நாரஹெம[...]

இலங்கையில் மூன்று கோள்களை முக்கோண பாதையில் பார்க்கலாம்: கொழும்பு பல்கலைக்கழகம்

இலங்கையில் மூன்று கோள்களை முக்கோண பாதையில் பார்க்கலாம்: கொழும்பு பல்கலைக்கழகம்

May 25th, 2013

சூரியனை சுற்றியுள்ள கோள்களில் மூன்று கோள்கள் முக்கோண பாதையில் தற்போது சுற்றிவருவதை வானத்தில் பார்க்க[...]

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில் சோனியா காந்தி 9-வது இடம்

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில் சோனியா காந்தி 9-வது இடம்

May 24th, 2013

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் த[...]

இடதுசாரித் தீவிரவாதிகளிடம் பொலிசார் அதிரடி சோதனை

இடதுசாரித் தீவிரவாதிகளிடம் பொலிசார் அதிரடி சோதனை

May 24th, 2013

ஜேர்மனி அதிகாரிகள் ஒரே நாளில் பல ஊர்களில் இருந்த இடதுசாரித் தீவிரவாதிகளிடம் அதிரடி சோதனை நடத்தியுள்ள[...]

காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!

காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!

May 24th, 2013

காதல் அழியாமல் இருக்க வேண்டுமெனில் ஒருசிலவற்றை பின்பற்றி தான் ஆக வேண்டும். மேலும் ஒருசில கட்டுப்பாடு[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*