Published On: Tue, Jul 10th, 2012

யாழ். வீதி விபத்தில் பலியான இளைஞர்!

Share This
Tags

யாழ். ஆவரங்கால் பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளைஞர், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை பருத்துறையிலிருந்து யாழ்.நோக்கி வந்துகொண்டிருந்த அரச பேருந்து எதிரே சென்ற வாகனத்தை மிதமிஞ்சிய வேகத்தில் முந்திச் செல்ல முற்பட்டபோது பருத்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய வாகனத்தில் மோதுண்டது.

இதனால் தூக்கி வீசப்பட்ட வாகனம் வீட்டு மதில் ஒன்றுடன் மோதியே நிறுத்தப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த வாகனத்தில் பயணித்த மு.திவாரகன் (வயது22) என்ற பழ வியாபாரம் செய்யும் இளைஞர் படுகாயமடைந்தார்.

பின்னர் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் மாலை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

கருத்துக் கணிப்பு

செக்ஸ் இல்லாத காதல் சாத்தியமா?

View Results

Loading ... Loading ...