இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ஜயசூரிய, தனது மனைவியான சன்ட்ரா டானியாவ் டி சில்வாவிடமிருந்து விவாகரத்து கோரி தனது சட்டத்தரணி ஊடாக கொழும்பு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தனது மனைவி உரிய முறையில் தம்மைக் கவனிப்பதில்லை என சனத் ஜயசூரிய நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சனத் ஜயசூரியவிற்கும் அவரது மனைவி சன்ட்ராவிற்கும் மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
அத்துடன் அவரது மனைவி முன்னாள் விமானப் பணிப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சனத் ஜயசூரிய பிரபல இந்திய தொலைக்காட்சி ஒன்றின் நடனப் போட்டித் தொடர் ஒன்றில் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










