Breaking News
Home / latest-update / ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஈரானின் வடமேற்குப் பகுதியில், ஆப்கன் எல்லையோரத்தில் சன்கன் நகரில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 8 கிலோ மீட்டர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.



இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை உயிரிழப்புகள் ஏதும் இல்லை. எனினும் நில நடுக்கத்தினால் பெரும் பகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து எங்கள் குழு விசாரித்து வருகிறது” என்று ஈரான் அவசர கால உதவிக் குழு தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு ஈராக் – ஈரான் எல்லையில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் 700-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 2003 ஆம் ஆண்டு ஈரானில் கெர்மன் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 23,000 பேர் பலியானார்கள்.



Check Also

வன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் …