Breaking News
Home / latest-update / WhatsApp வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி தரும் அறிவிப்பு…பல லட்சம் கைப்பேசிகளில் சேவைகள் நிறுத்தம்..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

WhatsApp வாடிக்கையாளர்களுக்கு பேரதிர்ச்சி தரும் அறிவிப்பு…பல லட்சம் கைப்பேசிகளில் சேவைகள் நிறுத்தம்..!!

WhatsApp நிறுவனம் தனது செயலி குறிப்பிட்ட திகதிக்குக் பின் சில ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த இயலாது எனத் தெரிவித்துள்ளது.உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக வட்ஸ்அப் இருக்கிறது. எளிமையான பயன்பாடு காரணமாக உலகம் முழுக்க பிரபலமாகி இருக்கும் வட்ஸ்அப் செயலி iOS மற்றும் Android இயங்குதளங்களில் பயன்படுத்தப்படுகிறது.WhatsApp செயலியில் உள்ள SMS, Voice call, Video call போன்ற அம்சங்களை கொண்டு பயனர்கள் உலகின் எந்த பகுதியில் இருப்பவரையும் இணைய வசதியை பயன்படுத்தி மிக எளிமையாக தொடர்பு கொள்ள முடியும்.

பேஸ்புக்கின் WhatsApp செயலி பழைய Android, iOS மற்றும் Windows இயங்குதளங்களுக்கான சேவையை நிறுத்தப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் வழக்கத்தை வாடிக்கையாக கொண்டுள்ளது.அந்த வகையில், விரைவில் பல இலட்சம் ஸ்மார்ட்போன்களில் WhatsApp சேவை நிறுத்தப்பட இருக்கிறது.அதன்படி 2020, பெப்ரவரி முதலாம் திகதி முதல் iOS8 மற்றும் அதற்கு முன் வெளியான இயங்குதளங்களில் WhatsApp செயலியை பயன்படுத்த முடியாது.Android இயங்குதளத்தில் 2.3.7 மற்றும் அதற்கும் முந்தைய பதிப்புகளில் WhatsApp செயலி இயங்காது.

எனினும், வாடிக்கையாளர்கள் இந்த இயங்குதளங்களில் ஜனவரி 31, 2020 நள்ளிரவு 11.59 மணி வரை WhatsApp செயலியை பயன்படுத்த முடியும்.Android பயனர்கள் தங்களது செயலியை அன்-இன்ஸ்டால் செய்யும் முன் அவர்களின் சட் விபரங்களை பேக்கப் செய்து கொள்ள முடியும். சட் பேக்கப் செய்ய More options > Settings > Chats > Chat backup > Back Up கிளிக் செய்ய வேண்டும்.இதேபோன்று ஐபோன் பயனர்கள் சட் பக்கப் செய்ய iCloud backup exists in WhatsApp > Settings > Chats > Chat Backup கிளிக் செய்ய வேண்டும்.

Check Also

சீனாவில் கொரோனா வைரசுக்கு 9 பேர் பலி- மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம்

‘கொரோனா வைரஸ்’ என கருதப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல், இவ்வாண்டின் தொடக்கம் முதல் சீனாவில் பரவி வருகிறது. முதலில், சீனாவின் …