Breaking News
Home / latest-update / யாழ் பொன்னாலையில் கோர விபத்து…8 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ் பொன்னாலையில் கோர விபத்து…8 பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்..!

தார்ப் பரல்கள் மற்றும் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற உழவியந்திரம் ஒன்று பொன்னாலைச் சந்தியில் தடம் புரண்டதில் அதில் பயணம் செய்த 8 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காரைநகரில் வீதிப் புனரமைப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் உழவியந்திரத்தில் 10 தார்ப்பரல்களையும் ஏற்றிக்கொண்டு பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வீதியூடாகச் சென்று பொன்னாலைச் சந்தியால் காரைநகர் வீதிக்கு திரும்ப முற்பட்டனர்.அப்போது வேகமாகச் சென்ற உழவியந்திரம் பொன்னாலைச் சந்தியில் உள்ள வளைவில் திரும்ப முற்பட்டபோது உழவியந்திரப் பெட்டி உழவியந்திரத்தை விட்டு தனியாகக் கழன்று தடம் புரண்டது.இந்த விபத்தின்போது, உழவியந்திரப் பெட்டி தலைகீழாகக் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்தவர்களில் சிலர் தூக்கி வீசப்பட்டதுடன் சிலர் பெட்டிக்குள் அகப்பட்டுக்கொண்டனர்.அவர்கள் தார்ப்பரல்களுடன் சேர்ந்து வீழ்ந்த நிலையில், பெட்டிக்குள் சிக்கியவர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் மீட்டெடுக்கப்பட்டனர்.படுகாயமடைந்த இருவர் உட்பட 6 பேர் உடனடியாக மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன் மற்றைய இருவர் காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டவர்கள், அதன் பின்னர் அங்கிருந்து நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டனர்.




இந்த விபத்தில் பொன்னாலையைச் சேர்ந்தவர்களான மு.நாகமுத்து (வயது-65), மா.ஸ்ரீவானந்தம் (வயது-45), நா.றஞ்சன் (வயது-41), வ.தினுஜன் (வயது-18), ரா.தபுசன் (வயது-21), வ.பசுங்கிளிராசா (வயது-63) ஆகியோரும் பல்லசுட்டியைச் சேர்ந்த வ.வசிகரன் (வயது-34), எஸ்.துஜிபன் (வயது-20) ஆகியோருமாக 8 பேர் காயமடைந்தவர்கள் ஆவார். அத்துடன் அவர்களில் நாகமுத்து, வசிகரன் ஆகிய இருவரும் படுகாயமடைந்ததுள்ளனர்.

பசுங்கிளிராசா, துஜீபன் ஆகியோர் காரைநகர் பிரதேச வைத்தியசாலையிலும் ஏனையோர் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதேவேளை குறித்த விபத்திற்கு அதி வேகமே காரணம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Check Also

மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டு

இந்நாட்டில் அரிசி மாஃபியா என்பது பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்களின் நாடகமாகும் என மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் …

error: Content is protected !!