Breaking News
Home / latest-update / லசித் மலிங்கவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி..? கப்டன் பதவியை தீர்மானிக்கும் இந்தியத் தொடர்..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

லசித் மலிங்கவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி..? கப்டன் பதவியை தீர்மானிக்கும் இந்தியத் தொடர்..!

இலங்கை ரி20 அணியின் கப்டன் லசித் மலிங்கவிற்கு, இறுதி எச்சரிக்கை மணியை சிறிலங்கா கிரிக்கெட் ஒலிக்க விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவிற்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட ரி20 தொடரில், இலங்கையின் பெறுபேற்றைப் பொறுத்தே, லசித் மலிங்க கப்டனாக தொடர்வதா இல்லையா என்ற இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.




ஜனவரி 5,7,10ம் திகதிகளில் இந்தப் போட்டிகள் நடக்கவுள்ளன.அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ரி20 உலகக்கிண்ணத்திற்கான நிரந்தர கப்டன் இன்னும் நியமிக்கப்படவில்லையென்று சிறிலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் குறிப்பிட்டு வந்துள்ளனர். எனினும், மலிங்கவை உலகக்கிண்ணம் வரை கப்டனாக நீடிக்க வைக்கும் யோசனை சிறிலங்கா கிரக்கெட்டிடம் இருந்தது. எனினும், அவரது தலைமையில் அணி தொடர்ந்து தோல்வியை தழுவி வருவதால், அணித் தலைவரை மாற்றுவதென்ற முடிவிற்கு அதிகாரிகள் வந்துள்ளனர்.எனினும், அவசியமான வீரர் என்ற அடிப்படையில், அவர் அணியில் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.




Check Also

பாக்- ஜலசந்தி கடற்பரப்பு வழியாக மன்னாரிலிருந்து நீந்தி இந்தியாவை சென்றடைந்த வெளிநாட்டுப் பெண்மணி..!!

அமெரிக்காவைச் சேர்ந்த எடிஹ என்ற பெண்மணி தலைமன்னார் முதல் தமிழகத்திலுள்ள தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10.15 மணி …