Breaking News
Home / latest-update / ஓடும் விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதி!மின்னல் வேகத்தில் உயிரை காப்பாற்றிய 6 வயது மகள்!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஓடும் விமானத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கதி!மின்னல் வேகத்தில் உயிரை காப்பாற்றிய 6 வயது மகள்!

லண்டன் விமானத்தில் பயணித்த தாய்க்கு பக்கவாதம் ஏற்பட்ட நிலையில் அதை சரியாக கவனித்து உதவி கோரிய 6 வயது மகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லண்டனை சேர்ந்த Alexandra Hajipaulis என்ற பெண் தனது மகள் Jaideen (6) உடன் கிரீஸ் செல்லும் விமானத்தில் ஏறினார்.விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் Alexandraவுக்கு பக்கவாதம் ஏற்பட்டு அப்படியே இருக்கையில் சரிந்தார்.இதை விமான ஊழியர்கள் யாரும் கவனிக்காத நிலையில் அவரின் மகள் Jaideen பார்த்து உடனடியாக என் தாய்க்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது, உடனே வாருங்கள் என விமான ஊழியரிடம் சொன்னார்.இதையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு Alexandra மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


மருத்துவர்கள் கூறுகையில், Alexandraவின் நரம்புகளில் பலவீனம் ஏற்பட்டு அதன் பாதிப்பால் திடீரென பக்கவாதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.சிறுமி Jaideen-ன் உடனடியாக தகவலால் Alexandraவின் உயிரை காப்பாற்ற முடிந்ததே தவிர அவரின் இரண்டு கால்களும், கைகளும் செயலிழந்துள்ளது.இந்த சம்பவம் ஒரு வருடத்துக்கு முன்னர் நடந்த நிலையில் இன்னும் அவர் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருகிறார்.Alexandra கூறுகையில், என் மகளை நினைத்தால் எனக்கு பெருமையாக உள்ளது, என் நிலையை பார்த்து அவர் செய்த செயலால் தான் நான் உயிர் பிழைத்தேன்.தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன், விரைவில் நலம் பெறுவேன் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

Check Also

ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய வங்கிகள் இயங்குகிறதா – ஆராய்கிறது மத்திய வங்கி

கொரோனா வைரஸ் பரவலால் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ள பொது மக்களுக்காக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள வங்கி சலுகைகள் செயற்படுத்தப்படுகிறதா என்பது தொடர்பில் இலங்கை …