Published On: Mon, Jul 2nd, 2012

ராமகாண்டம்

Share This
Tags

அறைகுவல் விதித்தவனே அண்டம் ஆண்டவனே
ரகுவம்சத்தின் கீர்த்தியை வான்முட்ட செய்தவனே
சீதையவலின் கண்ணீர்ரை கல் என எண்ணியவனே
காற்றுகுட தீண்ட பேதையவளை பரிசித்த பதிதர்மனே

கவியாடை அணிந்ததாள் காரீருளில் சூழ்ந்தாயோ
கண்மை பூசியதால் கள்ளத்தனம் குடி கொண்டதோ
பவித்திரமாணவள் என்று அறிந்த பின்பும்
ராஜமமதையில் வீழ்ந்தாயோ

அமிர்தகலை கற்றவனே அயர்ச்சியடைந்தயோ
அபலையை அவதூறுக்கு இழுந்தாயோ
இதுதான் இதுதான் நீசொன்ன வேதமா
இதுதான் இதுதான் நீகற்ற வித்தையா

போரை நிறுந்தா ராவணனும் சீதையை தடுக்க நீயும்
சமன் என்பான் இக் கவி மகன்
ராவணன் சுகபோதையில் வீழுந்தான் என்றால்
நீயோ ராஜபோதையில் வீழுந்தவன் என்பேன்

என்னவென்று எண்ணீர் சிதையவளை கல்லில் பூத்த பூவென்றா
இல்லையெனில் கல்லில் உரியும் நார் என்றா இல்லை
சீதையவளவின் கற்பை குளிர் என்று எண்ணினாயோயில்லை
பேதையவளின் சரீரத்தை பஞ்சு என்றா எண்ணினாயோ

ராமபுகலாரத்தில் வீழ்ந்தாயோ சீதையை தனிமையில் வதைந்தாயோ
அரசமேகம் எற்றயோ கவியாடை தான் கொடுத்தாயோ
உலகெங்கும் பட்டம்பெறவே அபிசாரி பட்டம் கொடுத்தவனே
உன்நாமம் நிலைந்திடவே சீதையை வனவசம் அனுப்பினாயோ

சீதையை சிறையிட்டபோது வடிந்த வெள்ளை ரத்தம்
இப்போது கண்னுக்குள்ளேயே கரைந்துவிட்டதா
சீதையை பிரித்த போது நெர்ந்த மணம்
சீதையை இழக்கையில் கல்லாய் போனதோ

உனக்காய் பேர்ரிட்டு உயிர்மாயிந்த வானரங்களின்
வீரத்தை இழிவு செய்து தார்மம் கார்ந்தவனே
சீதைக்காய்யிட்டபோர் சீதையை வதைந்தது என்றால்
அலக்ககுலம் அழிந்த நீயும் அரக்கன்ஏன்பேன்

ராஜதர்மம் ஏற்றதால் மனிததர்மம் மறந்தாயோ
குலதர்மம் காக்க குலவதியை வதைந்தாயோ
நான்யேற்றியதால் நாணம் இழந்தாயோ
புகலாரம் தேடையில் துணைவியை தொலைந்தாயோ

சீதையில்லா நீ அருஞ்சுரம் என்பேன்
சீதையில்லா ராமன் அவுணர் என்பேன்
ஆகையில் மீண்டும் பிறந்து சீதையை கார்ந்திடு
உணக்காய் மீண்டும் ராவணனாய் வருவேன்

ரஜீராஜ்

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

கருத்துக் கணிப்பு

செக்ஸ் இல்லாத காதல் சாத்தியமா?

View Results

Loading ... Loading ...