இலங்கையில் கடும் வரட்சி -அழிவின் விளிம்பில் பயிர்கள்!

பருவமழை தாமதமாவதால் இலங்கையில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்கள் வற்றியுள்ளதால், விவசாயம், நீர் மின்உற்பத்தி என்பன கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மகிந்த ராஜபக்ச நேற்று அலரி மாளிகையில், அவசர கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் அரசின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் திறைசேரி செயலர் ஆகியோரும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.

இலங்கையின் வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் வரட்சியினால் 150,000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் முற்றாக அழியும் ஆபத்தில் இருப்பதாக விவசாய அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொத்மல, பொல்கொல்ல நீர்த்தேக்கங்களில் இருந்து நீரைப் பெறும் விவசாய நிலங்களும் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.

சிறிய குளங்கள், நீர்த்தேக்கங்கள் முற்றாக வற்றி வறண்டு போயுள்ளன.

பாரிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பொலன்னறுவில் 7500 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் கைவிடப்பட்டுள்ளன. மேலும் 15 ஆயிரம் ஏக்கர் நெல், 50 ஆயிரம் ஏக்கர் ஏனைய பயிர்களும் அழியும் ஆபத்தில் உள்ளன.

இதற்கிடையே, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் நீர்மின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்யாது போனால் நீர் மின்உற்பத்தி முற்றாக தடைப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நிலைமையை சமாளிக்க அனல் மின் உற்பத்தி மூலமே மின்சாரத் தேவை ஈடுசெய்யப்படுகிறது.

இதனால் விரைவில் கடுமையான மின்வெட்டு, நீர்வெட்டு என்பன நடைமுறைக்கு வரும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Special Recent Posts

நரைமுடி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? ஈஸியா சரிசெய்யலாம்...

நரைமுடி பிரச்சனையால் அவஸ்தைப்படுறீங்களா? ஈஸியா சரிசெய்யலாம்...

June 19th, 2013

பெரும்பாலானோர் சிறு வயதிலிருந்தே நரை முடி பிரச்சனைக்கு ஆளாகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில்[...]

19 ஜூன் 2013 தின பலன்

19 ஜூன் 2013 தின பலன்

June 19th, 2013

மேஷம் எதார்த்தமாக பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைப்பட்ட காரியங்களையும் விரைந்து முடிப்[...]

 பிந்து மாதவி ஏன் வரவில்லை?

பிந்து மாதவி ஏன் வரவில்லை?

June 19th, 2013

ஒரு படத்தின் ஹீரோயின் அப்படத்தின் பிரஸ்மீட்டுக்கு வரவில்லை என்றால் போதும். மூக்கில் வேர்வை துளி மினு[...]

சென்னையில் இருந்து கொழும்புக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு! பயணிகள் பதற்றம்

சென்னையில் இருந்து கொழும்புக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு! பயணிகள் பதற்றம்

June 19th, 2013

சென்னை விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட விமானம் பறப்பதற்கு தயாராகி ஓடுபாதைக்கு வந்[...]

 உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 130 ஐக் கடந்தது

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 130 ஐக் கடந்தது

June 19th, 2013

உத்தர்காண்ட் மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை மற்றும் வெள்ளப்[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*