சிதைந்த போன நகரத்தின் எஞ்சிய துண்டில்
ஒட்டிக்கொணடிருக்கிறது உயிர்
இனத்தின் எஞ்சிய விதைகள்
வாழ்வின் பாடலை பாடிக்கொண்டும்
வானமதிர கத்திக்கொண்டும்
இருக்கின்றன.
இரத்தமும் சதையுமான
அதே பூமியில் இன்னலுறும்
நினைவுகள்
கனவுகளால் ஆன சிறகுகளில்
மிதந்து கொண்டிருக்கின்றன
கூடுகள் பறிபோன அவ்வூரின் சுதந்திர பறவைகள்
என்றோ ஒருநாள்
வாழ்வு மீட்கப்படும் என்ற நம்பிக்கையில்
சிவனேஸ்வரன் பிரியங்கனி
இலக்கியகுவியத்திற்காக .











