எதிர்வரும் டுவெண்டி20 உலக கோப்பை போட்டிகளில் கலந்து கொள்வதே தனது அடுத்த இலக்கு என இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்காவில் புற்றுநோய் சிகிச்சை மேற்கொண்டு நாடு திரும்பியிருந்த யுவராஜ் சிங்கின் உடல் நிலையில் தற்போது நல்ல ஆரோக்கியம் காணப்படுவதுடன் அவர் தொடர்ந்து கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறார்.
இந்நிலையில் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகெடமியில் உடல் பயிற்சிகள் மேற்கொண்டிருந்த போது கருத்து தெரிவிக்கையில், நான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். எனது உடல் நிலை படிப்படிப்படியாக உறுதியாகி வருகிறது. டுவெண்டி20 உலக கோப்பை என்பது எனது இலக்கு. எனினும் அதற்கு சற்று முன்னதாகவே விளையாடுவதற்கு தயாராகிவிடுவேன் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
அடுத்து வரும் சில நாட்களுக்கு அவர் தென் மாநிலங்களில் உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடவுள்ளார். நான் எனது ஷெடியுலை பார்க்க வேண்டும். ஆகஸ் மாதம், நான் தென் மாநிலங்களில் சில போட்டித்தொடரில் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். திகதிகளை சரிபார்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.










