ஜெர்மனியப் பிரஜை ஒருவர் 170 கிராம் வரையிலான கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர் பெந்தோட்டை பகுதியில் கைதுசெய்யப்படும்போது செல்லுபடியாகும் கடவுச்சீட்டை வைத்திருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பலப்பிட்டிய நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.










