Breaking News
Home / latest-update / உலகப் புகழ்பெற்ற போயிங் விமான நிறுவனத்திற்கு எதிராக 85 மில்லியன் நஷ்டஈடு கோரி வழக்கு.!!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

உலகப் புகழ்பெற்ற போயிங் விமான நிறுவனத்திற்கு எதிராக 85 மில்லியன் நஷ்டஈடு கோரி வழக்கு.!!!

போயிங் விமானத் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த விமான இறக்குமதி நிறுவனம் ஒன்று வழக்குத் தொடர்ந்துள்ளது.தனது நிறுவனத்துடன் மேற்கொண்ட 22 ஒப்பந்தங்களை போயிங் விமான நிறுவனமானது மீறியமையை மேற்கொள் காட்டிய குறித்த நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளதுடன், 185 மில்லியன் டொலரும் நஷ்டஈடாக கோரியுள்ளது.இந்தோனேஷியா மற்றும் எத்தியோப்பியாவில் 737 மெக்ஸ் ரக விமானங்கள் விபத்துக்கு உள்ளானதில் 300ற்க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.இந்த இரண்டு பெரிய விபத்துகளுக்கு பிறகு அந்த வகை விமானங்கள் பறப்பதற்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டிருந்த போதும், அதன் தயாரிப்பு நிறுத்தப்படவில்லை.

இந் நிலையில், கடந்த திங்கட்கிழமை போயிங் 737 மெக்ஸ் ரக விமானனத்தின் தயாரிப்பு தற்காலிகமாக ஜனவரி மாதம் வரை இடைறுத்தப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்தது.இதன் காரணமாக அயர்லாந்தைச் சேர்ந்த ‘Timaero Ireland Ltd” என்ற நிறுவனம் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தே அமெரிக்கா நீதிமன்றில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளது.வோஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டலிலிருந்து இயங்கிவரும் போயிங் நிறுவனம், அமெரிக்காவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

வன்முறையில் பலியான ரத்தன் லால் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிதி – டெல்லி அரசு, பாஜக அறிவிப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் …