Published On: Sun, Jun 17th, 2012

ஜீவா கேரியரில் முகமூடி பெரிய பட்ஜெட் படம் : மிஷ்கின்

Share This
Tags

இந்த முகமூடி சாதாரண மிடில் கிளாஸ் பையனோட கதை. நிறைய இழப்புக்கள், நிறைய இறப்புகளென்று சில கறுப்பு பக்கங்கள், வெள்ளை பக்கத்தில் ரோஜாப்பூ வைத்த மாதிரியான சில காட்சிகளென்று கடந்து உச்சத்தை அடைவது தான் கதை.

காதல், வீரம், சோகம், நகைச்சுவைன்னு எல்லாவற்றையும் சம அளவில் கலந்து குழந்தைகளோட குடும்பமாக உட்கார்ந்து பார்க்கும் ஒரு படமாக இருக்கும் என்கிறார்கள்.

முகமூடி பற்றி மிஷ்கின் இப்படி சொல்கிறார்

இதுவரை நான் ஜீவாவை தள்ளி நின்னே பார்த்தவன், ஜீவாவும் என்னை அப்படித்தான் பார்த்திருக்கிறார். இணைந்து பணியாற்ற தொடங்கிய போது தான் பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். இந்த புரிதல் தான் படத்திற்கு ‘ஜெல்’ ஆக அமைஞ்சிருக்கு ஜீவா தவிர இந்த படத்திற்கு வேறு யாரும் சரியா வந்திருக்க மாட்டாங்கன்னு படம் பார்க்கும் போது நீங்களே உணர்வீர்கள்.

ஹாலிவூட் படங்களில் வில்லன் என்பவன் ஹீரோவை விட பலசாலியாகவோ, சமமானவனாகவோ இருப்பான். முகமூடி வில்லன் நரேனும் அப்படியான பவர்ஃபுல் கேரக்டரில் நடிச்சிருக்கிறார். அப்புறம் ஆடியன்ஸின் விழியில் விழுந்து இதயம் நுழையும் அளவிற்கு அழகுப்பியல் பூஜா ஹெக்டேவை நடிக்க வைச்சிருக்கிறேன். நாசா சார் போலிஸ் ஆபிசரா வர்றார். சத்யா இசையில் மூன்று பாடல்கள் இந்த வருஷத்தின் சூப்பர் ஹிட்டாக அமையும்.

ஜீவாவோட கெட்டப்பிற்காக நாலு நாடுகளில் அலைந்து, கடைசியா ஹாங்காங்கில் கபரில்லா வில்கிங் கேள்விப்பட்டு போனேன். ஐந்து மாதங்கள் மெனக்கெட்டு அவர் வடிவமைத்து கொடுத்த சூப்பர் மேன் காஸ்டியூம் ரசிகர்களுக்கு விருந்தா அமையும். 6 மெட்டீரியல் கலந்து அந்த உடை தயாரிக்கப்பட்டது. அந்த உடையை போட்டு கொண்டு பத்து நிமிஷம் கூட இருக்க முடியாது.

அவ்வளவு ஹிட்டாக இருக்கும். ஒவ்வொரு முறையும் அதை போட்டு கழற்றும் போது ஜீவாவின் கண்ணெல்லாம் மிளகாயை அரைத்து ஊற்றியது மாதிரி சிவந்து போயிருக்கும். ஆனா கேரக்டரில் இருந்த ஈடுபாட்டால் ஜீவா அந்த சிரமங்களையெல்லாம் தாங்கிக்கிறார்.

எண்டர் தி டிராகன் படத்தில் புரூஸ் லீயுடன் கண்டை போட டோனி லுங் என்ற பெரிய மாஸ்டரை வைத்து தான் சண்டை காட்சிகளை உருவாக்கி வருகிறோம். குங்ஃபூ கலையில் 40 வருட அனுபவம் உள்ளார் அவர். 59 வயசுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. 30 வயசுக்கான தோற்றமும் சுறுசுறுப்பும் உள்ளவர். படத்திற்கு இவருடைய பங்கு பெரிய பலமாக அமைச்சிருச்சு. ஜீவா கேரியலும் என்னோட கேரியரிலும் முகமூடி பெரிய பட்ஜெட் படமாக உருவாகியிருக்கு.

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

கருத்துக் கணிப்பு

செக்ஸ் இல்லாத காதல் சாத்தியமா?

View Results

Loading ... Loading ...