கெய்லின் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்துமா மேற்கிந்திய தீவுகள்

இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியின் மேற்கிந்திய தீவுகள் அணி மோதவுள்ளது.
இங்கிலாந்தை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஒரு டி20 போட்டி நடைபெற்று வருகிறது.

டெஸ்ட் தொடரை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வெஸ்ட் என்ட் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

நீண்ட இடைவெளிக்குப் பின்பு கிறிஸ் கெய்ல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு விளையாடவிருக்கிறார். இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் பிராட், ஆண்டர்சன், பிரெஸ்னன், ஃபின் ஸ்வான் ஆகியோருக்கு கடுமையான வேலை உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியில் டினோ பெஸ்ட் சகலதுறை ஆட்டக்காரராக எழுச்சியடைந்திருப்பது, மர்லான் சாமுவேல்ஸ் அபாரமாக விளையாடி வருவது, விக்கெட் கீப்பர் ராம்தினின் அதிரடி துடுப்பாட்டம் ஆகியவற்றோடு கிறிஸ் கெய்லும் சேரும்போது மேற்கிந்திய தீவுகள் அணி சற்றே பலாமக உள்ளது என்றே கூறலாம்.

மாறாக இங்கிலாந்து அணியில் பார்மில் உள்ள கெவின் பீட்டர்சன் இல்லாதது பின்னடைவே. ஆனாலும் ஸ்விங் பந்து வீச்சிற்கு சாதகமான சூழ்நிலைமைகளால் இங்கிலாந்து வீச்சாளர்கள் பலமாகத் திகழ்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அவுஸ்திரேலியாவுக்கெதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 2- 2 என்று சமன் செய்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியில் இந்த முறை ஐ.பி.எல் கிரிக்கெட்டில் மாய பந்துவீச்சாளராக எழுச்சியுற்ற சுனில் நரைன் வேறு உள்ளார். இங்கிலாந்து அணி பந்து வீச்சில் பலம் பெற்றுள்ளது. ஆனால் ஸ்வின் நிலைமைகளில் மேற்கிந்திய தீவுகள் பந்து வீச்சிற்கு எதிராக இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் எழும்புவது கடினம் என்றே தோன்றுகிறது.

கீரான் பொல்லார்ட், ஆந்த்ரே ரசல், ரவி ராம்பால் ஆகியோர் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சுத் துறையை கவனிக்கின்றனர். இது பலமானதாக தெரியாவிட்டாலும் டேரன் சமி விக்கெட் எடுத்துக் கைகொடுப்பார். இவரது துடுப்பாட்டத்திற்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பாக்கலாம்.

ஒருநாள் போட்டிக்கான அணி விவரம்!

மேற்கிந்திய தீவுகள் அணி: லென்டில் சிம்மன்ஸ், கிறிஸ் கெய்ல், டேரன் பிராவோ, மர்லோன் சாமுவேல்ஸ், கீரான் பொல்லார்ட், டிவைன் பிராவோ, டிவைன் ஸ்மித், தினேஷ் ராம்தின், ஆந்த்ரே ரசல், டேரன் சமி, ரவி ராம்பால், சுனில் நரைன்.

இங்கிலாந்து அணி: அலியஸ்டர் குக் (அணித்தலைவர்), இயன் பெல், டிராட், பொபாரா, மோர்கன், கீஸ்வெட்டர், பிரெஸ்னன், பிராட், ஸ்வான், ஆண்டர்சன், ஸ்டீவ் ஃபின்.

Special Recent Posts

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில் சோனியா காந்தி 9-வது இடம்

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில் சோனியா காந்தி 9-வது இடம்

May 24th, 2013

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் த[...]

இடதுசாரித் தீவிரவாதிகளிடம் பொலிசார் அதிரடி சோதனை

இடதுசாரித் தீவிரவாதிகளிடம் பொலிசார் அதிரடி சோதனை

May 24th, 2013

ஜேர்மனி அதிகாரிகள் ஒரே நாளில் பல ஊர்களில் இருந்த இடதுசாரித் தீவிரவாதிகளிடம் அதிரடி சோதனை நடத்தியுள்ள[...]

காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!

காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!

May 24th, 2013

காதல் அழியாமல் இருக்க வேண்டுமெனில் ஒருசிலவற்றை பின்பற்றி தான் ஆக வேண்டும். மேலும் ஒருசில கட்டுப்பாடு[...]

நட்ஸ் மில்க் ஷேக்

நட்ஸ் மில்க் ஷேக்

May 24th, 2013

கோடையில் நன்கு புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமெனில், வீட்டில் எளிமையான முறையில்[...]

பொஸ்டன் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு தொடர்புடைய நபர் சுட்டுக்கொலை

பொஸ்டன் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு தொடர்புடைய நபர் சுட்டுக்கொலை

May 24th, 2013

பொஸ்டன் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட [...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*