பொடுகு பிரச்சனை போக வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…

பெண்களுக்கானாலும் சரி, ஆண்களுக்கானாலும் சரி, அழகைத் தரும் கூந்தல் அதிகமாக உதிர பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று தான், பொடுகு. அந்த பொடுகு தலையில் வந்து விட்டால், அதனால் வரும் அரிப்பைத் தாங்கவே முடியாது. எப்ப பார்த்தாலும் கையானது தலையிலேயே இருக்கும். இதனால் மிகுந்த சங்கடத்திற்கு தான் ஆளாகிறோம். இப்படி சங்கடத்தை ஏற்படுத்தும் பொடுகை நீக்க சில வழிகள் உள்ளன. அதுவும் வீட்டிலேயே உள்ளன. அது என்னவென்று படித்துப் பாருங்கள்…

பொடுகை நீக்க சில டிப்ஸ்…

1. வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, அதை தலையில் தேய்த்து குளித்து வந்தால், உடல் உஷ்ணம் குறைவதோடு, பொடுகு தொல்லையும் நீங்கும்.

2. வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நன்றாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து, குளித்து வந்தால், பொடுகு வராமல் தடுக்கலாம்.

3. வெந்தயத்தை தேங்காய் எண்ணெயோடு சிறிது சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சனையை நீக்கலாம்.

4. தலைக்கு குளிக்கும் போது, சிறிது தயிர், முட்டை மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து தலையில் தேய்த்து வாரம் ஒரு முறை குளித்தால், பொடுகு மறையும்.

5. துளசி, கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்து, சிறிது எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.

6. நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு ஆகியவற்றை தண்ணீரில் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், பொடுகு நீங்கும்.

7. தலைக்கு குளிக்கும் போது, இறுதியாக குளிக்கும் தண்ணீரில், சிறிது வினிகர் கலந்து தலைக்கு ஊற்றி குளித்தால், பொடுகு வராமல் இருக்கும்.

8. தேங்காய் எண்ணெயில் வசம்பை நன்கு பவுடராக்கி, அதில் போட்டு ஊற வைத்து, அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

Special Recent Posts

26 மே 2013 தின பலன்

26 மே 2013 தின பலன்

May 26th, 2013

மேஷம் இரவு 8 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப[...]

விஜய் விலகிய அதே பகலவனில் ஜெயம் ரவி… சீமான் இயக்குகிறார்!

விஜய் விலகிய அதே பகலவனில் ஜெயம் ரவி... சீமான் இயக்குகிறார்!

May 26th, 2013

விஜய் நடிப்பதாக இருந்து திடீரென வெளியேறிய அதே பகலவன் படத்தில் இப்போது நடிக்க ஒப்பந்தமாகியிருப்பவர்[...]

மே 28 குருப்பெயர்ச்சி : உங்கள் ராசிக்கு எப்படி பலன்கள் மாறுகின்றன?

மே 28 குருப்பெயர்ச்சி : உங்கள் ராசிக்கு எப்படி பலன்கள் மாறுகின்றன?

May 26th, 2013

மனிதர்க்கு வாழ்க்கையை சாதகமாகவும், பாதகமாகவும் உருவாக்கி வழிநடத்துபவர்கள் நவக்கிரகங்கள் என்று ஜாதக ஜ[...]

இன்று ஐபிஎல் இறுதிப்போட்டி : சென்னை மும்பை மோதல்!

இன்று ஐபிஎல் இறுதிப்போட்டி : சென்னை மும்பை மோதல்!

May 26th, 2013

ஐபிஎல் 6வது சீசன் போட்டிகள், கடந்த ஏப்ரல் 3ம் திகதி கோலாகலமாக துவங்கியது. 9 அணிகள் பங்கேற்ற இந்த தொ[...]

இனிமேல் ஆடைகளை உடுத்திய பின்னரும் அயன் செய்யலாம்: USB சாதனம் அறிமுகம்

இனிமேல் ஆடைகளை உடுத்திய பின்னரும் அயன் செய்யலாம்: USB சாதனம் அறிமுகம்

May 26th, 2013

கணனியின் வருகையைத் தொடர்ந்து அறிமுகமான USB தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றது.[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*