Published On: Sat, Jun 16th, 2012

தினபலன்கள் : ஜூன் 16

Share This
Tags

மேஷம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

ரிஷபம்
சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,கிளிப்பச்சை

மிதுனம்
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள்.குடும்பத்தாரின் ஆதரவு பெறுகும்.கையில் காசுபணம் புரளும்.வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.நட்பு வட்டாரம் விரியும்.தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண்:8 அதிர்ஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே,ஊதா

கடகம்
புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.வயிற்றுவலி,வாயுக்கோளாறு நீங்கும்.தெளிவான முடிவுகளை எடுத்து அருகிலிருப்பவர்களை அசத்துவீர்கள்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு,மரியாதை கூடும்.மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:மஞ்சள்,வெளீர்நீலம்

சிம்மம்
காலைப்பொழுதிலிருந்தே மகிழ்ச்சியுடன் காணப்படுவீகள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு.நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.வியாபாரத்தில் போட்டிகளை முறியடிப்பீர்கள்.தந்தைவழிச் சொத்திலிருந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.ஆடம்பரச் செலவுகளை தவிர்த்துவிட்டு சேமிக்கத்தொடங்குவீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண்:5 அதிர்ஷ்ட நிறங்கள்:பிங்க்,வெள்ளை

கன்னி
சந்திராஷ்டமம் தொடர்வதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். உடல் நலம் பாதிக்கும்-. முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்:3 அதிர்ஷ்ட நிறங்கள்:மிண்ட்கிரே,வைலெட்

துலாம்
இன்றையதினம் மனநிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.சகோதர,சகோதரிகளால் நன்மையுண்டு. உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள்.பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.வியாபாரத்தில் பாக்கிகளை அதிரடியாக செயல்பட்டு வசூலிப்பீர்கள்.தாயாரின் உடல்நிலை சீராக அமையும். அதிர்ஷ்ட எண்:1 அதிர்ஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை,நீலம்

விருச்சிகம்
ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள்.பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு.மறைமுகப் போட்டி களுக்கு பதிலடி தருவீர்கள்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.பயணங்களால் ஆதயம் உண்டு.விருந்தினர்,நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுண்டு.பிரபங்களின் உதவி கிடைக்கும்.கண் எரிச்சல்,தூக்கமின்மை நீங்கும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அதிர்ஷ்ட எண்:9 அதிர்ஷ்ட நிறங்கள்:ப்ரவுன்,ஆலிவ் பச்சை

தனுசு
சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவதன் மூலம் காரியங்கள் வெற்றியடையும்.குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.பேச்சில் கம்பீரம் பிறக்கும்.சகோதவகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை வெல்வீர்கள்.வேலையாட்களின் ஆதரவு கிட்டும்.பிராத்தனைகளை நிறைவேற்றுகள். கன்னிப்பெண் களுக்கு உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட எண்:2 அதிர்ஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு,கிரே

மகரம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். முகப் பொலிவு கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் நன்மை கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். அதிர்ஷ்ட எண்:4 அதிர்ஷ்ட நிறங்கள்:ரோஸ்,கிளிப் பச்சை

கும்பம்
வெளிப்படையான பேச்சால் சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள்.உத்தியோகத்தில் மகிழ்ச்சி கிட்டும்.தாயாரின் உடல் நிலை சீராகும்.கணவன்-மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும்.வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள்.அரசாங்க காரியங்களில் அனுகூலமான நிலைக் காணப்படும்.உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். அதிர்ஷ்ட எண்:6 அதிர்ஷ்ட நிறங்கள்:கிரே,மெரூண்

மீனம்
மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென நினைப்பீர்கள்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள்.சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்ட எண்:7 அதிர்ஷ்ட நிறங்கள்:வெளிர் மஞ்சள்,ப்ரவுன்

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

கருத்துக் கணிப்பு

செக்ஸ் இல்லாத காதல் சாத்தியமா?

View Results

Loading ... Loading ...