Published On: Fri, Jun 15th, 2012

யூரோ 2012: ஸ்பெயின் இலகு வெற்றி, இத்தாலிக்கு மீண்டும் ஏமாற்றம்

Share This
Tags

யூரோ காற்பந்து போட்டியில் நேற்று நடைபெற்றா சி பிரிவு லீக் ஆட்டத்தில், இத்தாலி -

குரோஷிய அணிகள் போட்டியை 1-1 என சமநிலையில் முடித்தன. ஆட்டத்தின் தொடக்கம் முதல் இத்தாலி அபாரமாக விளையாடி வந்தது. போட்டியின் 39 வது நிமிடத்தில் பிர்லோ கோல் அடித்து இத்தாலியை முன்னிலையை பெற செய்தார். குரோஷியா கோல் கீப்பர் ஸ்டீப் லிலெடிகோசோ தனது திறமையான களத்தடுப்பினால் இத்தாலியின் பல முயற்சிகளை முறியடித்தார். ஆட்டத்தின் பிற்பாதியில் 72 வது நிமிடத்தில் குரோஷிய வீரர் இவான் ஸ்டிரினிச் தட்டிக்கொடுத்த பந்தை, மாண்ட்சூகிச் கோலாக மாற்றி குரோஷியாவுக்கு ஒரு கோலை பெற்றுக்கொடுத்தார்.

அவர் இந்த தொடர்பில் அடித்துள்ள மூன்றாவது கோல் அதுவாகும். இதையடுத்து ஆட்டம் 1-1 என சமநிலை கண்டது. எனினும் முதல் போட்டியில் அயர்லாந்தை 3-1 என குரோஷியா வீழ்த்தியதால் 4 புள்ளிகளுடன் தனது குழுவில் முன்னிலை பெற்றுள்ளது. இத்தாலி அணி ஸ்பெயினுடனான முன்னைய போட்டியையும் சமநிலைப்படுத்தியது. தற்போதும் சமநிலையில் முடிந்துள்ளதால் அந்த அணிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

நேற்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் ஸ்பெயின் அணி 4-0 என அயர்லாந்தை தோற்கடித்தது. ஆட்டம் தொடங்கிய 4வது நிமிடத்திலேயே ஸ்பெயின் அணிக்காக டார்ஸ் மின்னல் வேக கோல் அடித்தார். இதையடுத்து பிற்பாதியில் தொடர்ந்து மூன்று கோல்களை இலாவகமாக போட்டு அபார வெற்றி பெற்றது.

இப்பிரிவில் குரோஷியா – ஸ்பெயின் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது. அடுத்த ஆட்டம் ஸ்பெயின் – குரோஷியாவுக்கு இடையில் நடைபெறவுள்ளது.

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

கருத்துக் கணிப்பு

செக்ஸ் இல்லாத காதல் சாத்தியமா?

View Results

Loading ... Loading ...