Breaking News
Home / latest-update / யாழில் இன்று பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..மர்மக் கும்பலினால் அடித்து நொருக்கப்பட்ட வீடு..பெறுமதி மிக்க உடமைகள் நாசம்..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழில் இன்று பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..மர்மக் கும்பலினால் அடித்து நொருக்கப்பட்ட வீடு..பெறுமதி மிக்க உடமைகள் நாசம்..!

யாழ். சுதுமலை வடக்கு பகுதியில் பட்டப் பகலில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த 6 பேர் கொண்ட மர்மக் கும்பல் வீட்டினை அடுத்து நொறுக்கிய நிலையில், பொலிசாரை கண்டதும் இரு மோட்டார் சைக்கிள்களை விட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.இந்தச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,சுதுமலை வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு இரு மோடடார் சைக்கிகளில் 6 பேர் கொண்ட மர்மநபர்கள் வாள்கள்,பொல்லுகளுடன் வந்துள்ளனர். வீட்டு யன்னல், வீட்டில் இருந்த பொருட்கள் என அணைத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.இதையடுத்து அங்கிருந்து அவர்கள் தப்பிச் செல்லும் போது இடைவெளியில் பொலிஸாரை கண்டுள்ளனர். இதனால், வந்த இரு மோட்டார் சைக்கிள்களை வீதியில் போட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர்.மோட்டார் சைக்கிகளை கைப்பற்றிய மானிப்பாய் பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Check Also

வரி ஏய்ப்பு புகார் எதிரொலி – ராஷ்மிகா நேரில் ஆஜராக உத்தரவு

வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக நடிகை ராஷ்மிகா வீட்டில் நடந்த சோதனையைத்தொடர்ந்து விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராக வருமான வரித்துறை …