மரணித்துக்கொண்டிருக்கும் வேர்..

வாழ்வில் எத்தனை விடயங்களை
நாம் தொலைத்திருக்கின்றோம்..
ஆனால்
தொலைக்க விரும்பாத ஒன்று- பாசம்.

கனவின் மடிதனிலே
கவிபாடும் நேரங்களில்
கண நேரமாவது
இனிமை தருவது
நம்மீது எவரோ கொண்ட-
நாம் எவர்மீதோ கொண்ட
பாசம்..!

வாழ்வின் ஏக்கங்களில்
இதுவும் ஒன்று..
எவராலும்
மறுக்கப்படாத- வெறுக்கப்படாத
நிஜம் இது..

இருந்தாலும்
சிலவேளைகளில்
இது
பொய்த்துப்போவதுமுண்டு..

”கண்மூடித்தனமான நேசம்
ஒருவனை
முட்டாளாக்கிவிடுகின்றது”

உண்மைதான்..
தகுதியறிந்துதான் பாசம்
வைக்கவேண்டியுள்ளது
இன்றைய உலகில்..

பாசம்- அது ஒரு கலை!
பாசம்- அது ஒரு கவிதை!
பாசம்- ஏங்கித்தவிக்கும்
உள்ளங்களுக்கு அரு மருந்து!
பாசம்-உலகின் சரித்திர சுவடி!

பரிபூரணமான பாசம்
உலகையே மாற்றிவிடுகின்றது..
எனிவரும் காலங்களில்
பாசத்தின் வேர்களை
நாம்
மரணித்த மனிதத்துள்
தேடவேண்டியிருக்கும்..!

பாசம் வேஷமாகாமல்
நேசம் செய்வோம்..
மரணித்துக்கொண்டிருக்கும்
வேர்களுக்கு
உரமூட்டுவோம்- மனிதம்
வாழ்வதற்காய்…!

இலக்கிய குவியத்திற்காக.

பிறைநிலா

Special Recent Posts

இறுதிச் சுற்றுக்குள் நுழைவது யார்? சென்னை–மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

இறுதிச் சுற்றுக்குள் நுழைவது யார்? சென்னை–மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

May 21st, 2013

ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ்–மும்பை இந[...]

பத்திரிகை அலுவலகத்தில் மூவர் மர்ம நபர்களால் குத்திக்கொலை

பத்திரிகை அலுவலகத்தில் மூவர் மர்ம நபர்களால் குத்திக்கொலை

May 21st, 2013

திரிபுரா மாநிலத்தில் உள்ள தினசரி நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் பட்டப்பகலில் 3 [...]

மட்டக்களப்பில், எரிவாயு சிலிண்டர் விழுந்து பாடசாலை மாணவி காயம்

மட்டக்களப்பில், எரிவாயு சிலிண்டர் விழுந்து பாடசாலை மாணவி காயம்

May 21st, 2013

மட்டக்களப்பு, ஓட்டமாவடி கொழும்பு பிரதான வீதியில், சமையல் எரிவாயு சிலிண்டர் லொறியில் இருந்து விழுந்தத[...]

21 மே 2013 தின பலன்

21 மே 2013 தின பலன்

May 21st, 2013

மேஷம் எண்ணம்போல் செயல்பட வேண்டும்மென எண்ணுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். தாயாரின்[...]

மொறுமொறுப்பான… ரவை வடை

மொறுமொறுப்பான... ரவை வடை

May 21st, 2013

மாலை வேளை வந்தாலே அனைவருக்கும் ஒரே குஷி தான். அதிலும் குழந்தைகளுக்கு என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனி[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*