இயற்கையாக கண் இமைகள் வளர வேண்டுமா?

பெண்களுக்கு முகத்தை அழகாக காட்டுவதில் ஒன்று தான் கண்கள். அக்காலத்தில் அழகான பெண்கள் என்றால் கண்கள் பெரிதாகவும், இமைகள் சற்று நீளமாகவும் இருந்தால் அவர்களே அழகானவர்கள். மேலும் அந்த கண் இமைகள் கண்களை தூசிகளில் இருந்து பாதுகாக்கிறது. அப்படிப்பட்ட அந்த கண் இமைகள் சிலருக்கு கிம்மியாக இருக்கும். இதற்காக அவர்கள் கடைகளில் விற்கும் செயற்கையான கண் இமைகளை வாங்கி பொறுத்திக் கொள்கிறார்கள். அப்படி செய்வதற்கு நாம் வீட்டிலேயே கண் இமைகளை அழகாகவும், நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்க்கலாம்.

கண் இமைகள் வளர சில டிப்ஸ்…

1. ஆமணக்கெண்ணெய் ஒரு மருத்துவ குணம் வாய்ந்த பொருள். தினமும் ஆமணக்கெண்ணெயை தூங்கும் முன் கண் இமைகள் மீது தடவவும். வேண்டுமென்றால் ஆமணக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி கூட தடவலாம். இவ்வாறு தொடர்ந்து இரண்டு மாதங்கள் தடவினால், கண் இமைகளானது நன்கு வளர்ந்து ஆரோக்கியத்துடன் காணப்படும்.

2. தினமும் கண் இமைகளை சீவும் சீப்பை வைத்து சீவினால் முடியானது நன்கு வளரும். அந்த சீப்பை வைட்டமின் ஈ எண்ணெயில் நனைத்து சீவலாம். வேண்டுமென்றால் வைட்டமின் ஈ மாத்திரைகளை பொடியாக்கி, எண்ணெய் வைத்து பேஸ்ட் போல் செய்து தடவலாம். இதனால் கண்களில் எந்த அரிப்பும் வராது. மேலும் இதனை தினமும் செய்தால் முடி கொட்டாமல், முடியானது நன்கு வளரும்.

3. தினமும் இமைகளை சுத்தமான சீப்பால் சீவ வேண்டும். அப்படி சீவும் சீப்பை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சீப்பானது சிறிதாகவும் இருக்கலாம் அல்லது மஸ்காரா ப்ரஸ் வைத்தும் சீவலாம். அதிலும் ஏதேனும் ஒரு இயற்கை எண்ணெயில் நனைத்து சீவினால் நல்லது. கண் இமைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது சீவ வேண்டும்.

4. ஆமணக்கெண்ணெய்/வைட்டமின் எண்ணெய் கிடைக்காதவர்கள் வாஸ்லினை பயன்படுத்தலாம். இது ஒரு சிறந்த நன்மையைத் தரும். இரவில் படுக்கும் முன் கண் இமைகள் மீது வாஸ்லினைத் தடவி, காலையில் வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவி விட வேண்டும். அப்படி கழுவ மறந்து விட்டால் அன்று முழுவதும் பிசுபிசுப்புடன் இருக்கும்.

5. நல்ல ஆரோக்கியமான புரோட்டீன் நிறைந்த உணவை உண்ண வேண்டும். இதனால் மிகவும் அழகான, அருமையான கண் இமைகளைப் பெறலாம். நம் உடலில் உள்ள தோல், முடி, நகங்கள், ஏன் கண் இமைகளுக்குக் கூட தினமும் புரோட்டீன் உணவை உண்ண வேண்டும். மீன், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.

இப்படியெல்லாம் செய்தால் முடியானது அழகாக, அடர்த்தியாக, நீளமாக வளரும். ஆனால் இதற்கு நிறைய பொறுமை வேண்டும், மேலும் இவற்றையெல்லாம் தினமும் செய்ய வேண்டும், இதனால் ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

Special Recent Posts

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில் சோனியா காந்தி 9-வது இடம்

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் வரிசையில் சோனியா காந்தி 9-வது இடம்

May 24th, 2013

உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் த[...]

இடதுசாரித் தீவிரவாதிகளிடம் பொலிசார் அதிரடி சோதனை

இடதுசாரித் தீவிரவாதிகளிடம் பொலிசார் அதிரடி சோதனை

May 24th, 2013

ஜேர்மனி அதிகாரிகள் ஒரே நாளில் பல ஊர்களில் இருந்த இடதுசாரித் தீவிரவாதிகளிடம் அதிரடி சோதனை நடத்தியுள்ள[...]

காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!

காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!

May 24th, 2013

காதல் அழியாமல் இருக்க வேண்டுமெனில் ஒருசிலவற்றை பின்பற்றி தான் ஆக வேண்டும். மேலும் ஒருசில கட்டுப்பாடு[...]

நட்ஸ் மில்க் ஷேக்

நட்ஸ் மில்க் ஷேக்

May 24th, 2013

கோடையில் நன்கு புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமெனில், வீட்டில் எளிமையான முறையில்[...]

பொஸ்டன் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு தொடர்புடைய நபர் சுட்டுக்கொலை

பொஸ்டன் குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு தொடர்புடைய நபர் சுட்டுக்கொலை

May 24th, 2013

பொஸ்டன் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட [...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*