விசாகபட்டிணம் எஃகு தொழிற்சாலையில் வெடிவிபத்து : 16 பேர் பலி?

ஆந்திர மாநிலத்தின் விசாகபட்டிணத்தில் உள்ள எஃகு தொழிற்சாலையில் நேற்றிரவு ஏற்பட்ட வெடி விபத்தில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலையின்சமீபத்தில் தனது செயற்பாட்டை தொடக்கிய ஆக்ஸிஜன் ஆலை பிரிவில் ஏற்பட்ட இவ்வெடிவிபத்தினால் வேகமாக தீ பரவத்தொடங்கியுள்ளது. இதில் 16 பேர் கொல்லப்படும் 20 க்கு மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாரிகள் சிலருக்கும் தீக்காயமேற்பட்டுள்ளது.

குறித்த ஆலையில் ஓர் சோதனை முயற்சி மேற்கொண்டிருந்த போதே வெடிவிபத்து நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு பணிபுரிந்து வந்துள்ளனர். விபத்து நடைபெற்ற போது சம்பவ இடத்தில் 31 பேர் பணியிலிருந்தனர். DGM Level அதிகாரிகளும் இருந்துள்ளனர்.

ஆக்ஸிஜன் ஆலையென்பதால் வேகமாக தீ அனைத்து இடங்களுக்கும் பரவியுள்ளது. காயமடைந்தவர்களில் அதிகமானோருக்கு 90 % தீக்காயமேற்பட்டுள்ளது. செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் காயமடைந்தவர்கள் சேர்க்கபப்ட்டு வருகின்றனர்.

விசாகபட்டிணம் எஃகு ஆலையில் கடந்த ஒரு வருடத்திற்குள் 8 விபத்துக்கள் நடந்துள்ளன. இறுதியாக கடந்த மே 22ம் திகதி நடைபெற்ற விபத்தில், ரூ 1 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருந்தது.

Special Recent Posts

22 மே 2013 தின பலன்

22 மே 2013 தின பலன்

May 22nd, 2013

மேஷம் இன்றையதினம் வியாபாரத்தில் சுமுகமான லாபம் உண்டு. கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து ப[...]

உங்கள் கழிப்பறைகளை விட அசுத்தமான 10 பொருட்கள் இவை!

உங்கள் கழிப்பறைகளை விட அசுத்தமான 10 பொருட்கள் இவை!

May 22nd, 2013

உங்களது டாய்லெட்டுக்களை விட அதிக கிருமிகளை கொண்ட அசுத்தமான பொருட்கள் எவை என உங்களுக்கு தெரியுமா? [...]

நிலவுடன் மோதி பெரும் பள்ளத்தை ஏற்படுத்திய விண்கல்: நாசா தகவல்

நிலவுடன் மோதி பெரும் பள்ளத்தை ஏற்படுத்திய விண்கல்: நாசா தகவல்

May 22nd, 2013

விண்வெளியில் இருந்து அதிவேகத்தில் வந்த விண்கல் ஒன்று, நிலவின் மீது மோதி வெடித்ததில் ஏற்பட்ட வெளிச்சத[...]

வெளிச்சத்துக்கு வந்தது சமந்தாவின் காதல்?

வெளிச்சத்துக்கு வந்தது சமந்தாவின் காதல்?

May 22nd, 2013

கூட்டத்திற்கு நடுவில் சமந்தா அமர்ந்திருக்க, ஜீவா மைக்கை பிடித்து 'நீதானே என் பொன் வசந்தம், புது ராஜ [...]

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.300 உயர்ந்தது

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.300 உயர்ந்தது

May 22nd, 2013

தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது. [...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*