Breaking News
Home / latest-update / என்னுடன் நடித்த ஹீரோவை தீவிரமாக காதலித்தேன் – இலியானா
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

என்னுடன் நடித்த ஹீரோவை தீவிரமாக காதலித்தேன் – இலியானா

நடிகை இலியானா, பிரபல நடிகர் ஒருவரை காதலித்ததாகவும், அந்த காதல் கைக்கூடவில்லை என்றும் கூறி அதிர்ச்சி அளித்திருக்கிறார். இது பற்றி இலியானா கூறியதாவது: ’என்னுடன் நடித்த ஹீரோவை தீவிரமாக காதலித்து வந்தேன். பல மாதங்களாக நல்ல நட்புடன் நாங்கள் இருந்தோம். பல முறை ஒன்றாக டேட்டிங் சென்றோம்.



ஆனால் அந்த காதல் கைகூடவில்லை. இப்போது வெளிநாட்டுக்காரரை காதலிக்கிறீர்களா என கேட்கிறார்கள். என்னுடைய சொந்த வாழ்க்கை பற்றி எனது பெற்றோருக்கு தெரியும். அவர்களுக்கு மட்டும் எல்லாம் தெரிந்தால் போதும் என்று நினைக்கிறேன். நான் திமிர் பிடித்தவள் என்கிறார்கள். அது பற்றி யார் எது சொன்னாலும் கவலையில்லை.

முதல் படத்துக்கு மட்டுமே டெஸ்ட் ஷூட்டில் பங்கேற்றேன். எல்லா படங்களுக்கும் டெஸ்ட் ஷூட்டில் நான் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்களின் உத்தரவுகளுக்கு ஏற்ப என்னால் ஆட முடியாது. என் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி மட்டுமே நான் வாழ்வேன்’ என்றார்.



Check Also

வரி ஏய்ப்பு புகார் எதிரொலி – ராஷ்மிகா நேரில் ஆஜராக உத்தரவு

வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக நடிகை ராஷ்மிகா வீட்டில் நடந்த சோதனையைத்தொடர்ந்து விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராக வருமான வரித்துறை …