Breaking News
Home / latest-update / யாழ்ப்பாணத்தில் குளமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ்ப்பாணத்தில் குளமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்

யாழ்ப்பாணம் – புங்கன் குளம் வண்ணான் குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குளத்தில் சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் பிரதேச மக்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 60 வயது மதிக்கத்தக்க கொழும்பு பகுதியை சேர்ந்த முதியவர் என தெரிவிக்கப்படுகிறது.

காட்டுப்பூச்சி என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்ட இவர் குடும்பத்தவர்கள் கைவிட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் தங்கி இருந்துள்ள நிலையிலே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை மீட்கும் பணிகளையும் முன்னெடுத்துள்ளனர்.

 

Check Also

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் மாலை 6.20 இற்கு வெளியான விசேட செய்தி……!

கொரோனா வைரஸை இல்லாதொழிக்கும் நோக்கில் கண்டி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு மீள் அறிவித்தல் …