ஏன் தூக்கம் வருகிறது?

தூக்கம் என்பது ஒவ்வொர் உயிருக்கும் இன்றியமையாதது. ஆனால் தூக்கம் என்பது எதனால் வருகிறது?
மறுநாள் ஒருவர் சுறுசுறுப்புடன் வேலை செய்வதற்கும், உழைக்க ஆயத்தமாவதற்கும் இயற்கை அளித்த பரிசு தான் தூக்கம்.

நம் தூக்கத்தில் தான் மூளை சுறுசுறுப்பாய் வேலை செய்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அடினோசின் என்கிற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் அதிகமாகும் போது நமக்குத் தூக்கம் வருவதாகவும், தூக்கத்தில் இந்த வேதிப்பொருட்கள் முற்றிலும் குறைக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

தூக்கத்தில் கண் அசையாத் தூக்கம், விரைவு கண் அசைவு தூக்கம் என இரண்டு வகைகள் உள்ளன. தூக்கத்தில் ஐந்து கட்டங்கள் உள்ளன. முதல் கட்ட தூக்கமான லேசான தூக்கத்தின் போது சத்தம் கேட்டதும் கலைந்துவிடும் அல்லது கூப்பிட்டவுடன் எழுந்து விடலாம். இரண்டாவது கட்டத் தூக்கத்தில் கண் அசைவுகள் முழுமையாக நின்று மூளையின் அலை வேகம் குறையும்.

மூன்றாவது கட்டத் தூக்கத்தில் மூளையின் அலை வேகமானது, மேலும் குறைந்து இடை இடையே அலையாக மாறுகிறது. நான்காம் கட்டத்தில் முழுக்க டெல்டா அலைகள் தூக்கத்தை ஆக்கிரமிப்பதால் மூன்றாம், நான்காம் கட்டம் ஆழ்ந்த தூக்கம் எனப்படுகிறது.

இவ்வேளையில் உடல் அசைவோ கண் அசைவோ முற்றிலும் இருப்பதில்லை. இந்த நிலையிலிருந்து விழித்து எழுவோர் எழுந்த பின்னரும் தங்களைச் சுற்றி நடைபெறுவது ஏதும் அறியார்.

ஆழ்ந்த உறக்கத்தில் தொலைபேசியில் பேசியது. அலாரம் அடித்தால் நிறுத்தி விட்டுத் தூங்கச் செல்வது போன்றவை பலருக்கு நினைவில் இருக்காது.

காபி, மூக்கடைப்பிற்கு போடப்படும் சில மாத்திரைகள் மருந்துகள் தூக்கத்தைக் கெடுக்கும். மன அழுத்தத்திற்கு மாத்திரை சாப்பிட்டால் கண்ணசைவு தூக்கம் வரும்.

அதிகமாக புகை பிடிப்பவர்களுக்கும் கண்ணசைவு தூக்க பாதிப்பு ஏற்படும். உடலில் நிக்கோடின் அளவு புகை பிடிப்பவர்களுக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் குறைவதால் தூக்கத்திலிருந்து விழிப்பு வரும்.

பிறந்த குழந்தைக்கு 16-20 மணி நேரம், வளரும் குழந்தைகளுக்கு 10-12 மணி நேரம் ஆண்களுக்கு 6 மணி நேரமும் பெண்களுக்கு 7 மணி நேரமும் தூக்கம் தேவைப்படும். கருவுற்ற பெண்கள் முதல் மாதங்களில் சற்று அதிகம் தூங்குவர்.

ஒரு மணி நேரம் தூக்கம் கெட்டால் அதனை அடுத்த பகல் பொழுதிலோ அல்லது இரவிலோ அதிகமாக தூங்கி உடல் சரி செய்கிறது. இது போன்று முடியாத போது மற்ற வேலைகளை அது பாதிக்கிறது.

வயது ஏற ஏற ஆழ்ந்த தூக்கம் வருவது இல்லையெனில் சர்க்கரை நோய், இதய நோய் ஆகிய உடல் உபாதைகளே காரணம். பகலில் உட்கார்ந்தவாறு தூங்கி விழுந்தால் சிறு சிறு இடைவெளிகளில் தூங்கினால் சரியாகத் துங்கவில்லை என அர்த்தம்.

மூளையும் நரம்புகளும் சரியாக வேலை செய்யத் தூக்கம் அவசியம். தூக்க குறைவினால் வேலையின்மை, கவனக்குறைவு, ஞாபக மறதி, மன உளைச்சல் ஆகியன ஏற்படும்.

குழந்தைகள் ஆழ்ந்த தூக்கத்தில் தான் ஹார்மோன் வளர்ச்சி பெற்று வளர்கின்றனர். புரத உற்பத்தி தூக்கத்தில் தான் அதிகரிக்கும். தூங்குகிறவர்கள் தான் அழகாக இருக்க முடியும். வெயில் மழை அன அழுத்தப்பாதிப்புகளை ஆழ்ந்து தூங்கினால் தான் சரி செய்ய முடியும்.

தூக்கம் கெடுவதால் ரத்தக்கொதிப்பு, இதய நோய், சர்க்கரை நோய், மன அழுத்தம் குழப்ப நோய் எதிர்ப்பு குறைவு -ஆகியன ஏற்படும். எனவே தூக்கம் அவசியம்.

Special Recent Posts

சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல்

சூதாட்ட வீரர்கள் வீட்டில் ரெய்டு: ஸ்ரீசாந்த் லேப்-டாப், மொபைல் பறிமுதல்

May 19th, 2013

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்த் தங்கிய மும்பை ஓட்டல் அறையில் இருந்து லேப்-டாப், ஐ-பேடு, டைரி உட்பட [...]

கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: ரூ.5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளை

கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: ரூ.5.5 கோடி மதிப்புள்ள நகைகளும் கொள்ளை

May 19th, 2013

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத[...]

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பெரும்புள்ளிகளின் பட்டியல்: பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள பெரும்புள்ளிகளின் பட்டியல்: பாகிஸ்தான் உளவுத்துறை எச்சரிக்கை

May 19th, 2013

பாகிஸ்தானில் ஜனாதிபதி சர்தாரி உட்பட பெரும்புள்ளிகளில் வீட்டை தாக்க தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள[...]

கல்லூரி மாணவரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

கல்லூரி மாணவரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் கைது

May 19th, 2013

கல்லூரி மாணவரை கடத்தி, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்து[...]

மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை

மனைவியுடன் தகராறு: கணவர் தீக்குளித்து தற்கொலை

May 19th, 2013

மனைவியுடனான தகராறில் விரக்தி அடைந்த கணவர், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஏர்வாடி [...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*