Breaking News
Home / latest-update / புதிய தனி நாட்டை உருவாக்கி பிரகடனம் செய்தார் நித்தியானந்தா..!! உலக நாடுகளை மலைக்க வைக்கும் அறிவிப்பு..!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

புதிய தனி நாட்டை உருவாக்கி பிரகடனம் செய்தார் நித்தியானந்தா..!! உலக நாடுகளை மலைக்க வைக்கும் அறிவிப்பு..!!

தனிக்கொடி, தனி பாஸ்போர்ட் என புதிய தனிநாட்டை உருவாக்கி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள சாமியார் நித்யானந்தா.தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடோர் அருகே உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி எல்லைகள் அற்ற, நாடுகள் அற்ற, இந்து நாட்டைக் கட்டமைக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் நித்யானந்தா.

தனது கனடா நாட்டு சீடரான சாரா லாண்ட்ரியிடம் தனிப்பட்ட முறையில் பேஸ்புக் மெசஞ்சரில் உரையாடிய நித்யானந்தா, வத்திக்கான் போல குட்டி நாட்டை அமைக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில், அண்மையில் வெளியிட்ட வீடியோவில் தனிநாடு குறித்து விளக்கம் அளித்துள்ளார். நித்யானந்தா கட்டமைக்கும் அந்த நாட்டிற்கு நித்யானந்தா கைலாசா என்று பெயர் வைத்துள்ளார்.

இந்த இணைய தளத்தில் இந்து மதத்தைப் பின்பற்றும் எவரும் தனது கைலாசா நாட்டின் குடிமகனாக ஆகலாம் என்றும் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.கைலாசா இந்து நாட்டின் தற்போதைய மொத்த மக்கள் தொகையாக 10 கோடி பேர் என்று பலரையும் வியக்கவைக்கும் வகையில் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.மேலும், அந்த நாட்டுக்கென்று பாஸ்போர்ட், மொழி உள்ளிட்டவற்றையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு அமைச்சரவையையும் உருவாக்கி உள்ளார். நாட்டின் பிரதமருக்கு இணையாக கைலாசா நாட்டின் பிரதமராக நித்யானந்தா இருப்பார். உள்நாட்டு பாதுகாப்புத் துறை மற்றும் ராணுவத்திற்கு தனித் துறை அமைத்துள்ளார் நித்யானந்தா. ஒவ்வொரு நாளும் அங்கு அமைச்சரவை கூட்டத்தையும் நடத்தி வருகிறார்.

கைலசா நாடு குறித்து அவர் வெளியிட்டிருக்கும் இணையதளத்தில் ‘இந்த நாடு எல்லைகள் கடந்தது. சனாதனத்தைக் காப்பதற்காக இந்த நாடு அமைக்கப்படுகிறது. தங்களுடைய நாட்டில் இந்து மதத்தை பின்பற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கான நாடு என்று குறிப்பிட்டுள்ளார்.கைலாசா அரசாங்கத்தில் 10 துறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று ‘அலுவலகத்திற்கு பொறுப்பானது’. அரசாங்கத்தின் சர்வதேச உறவுகள் டிஜிட்டல் ஈடுபாடு சமூக ஊடக அலுவலகம். வீட்டு விவகாரங்கள், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கல்வி ஆகியவை பிற துறைகளாகும். நித்யானந்தா கைலாசத்திற்கு தனி நாடு அந்தஸ்து வழங்க ஐ.நாவை நாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .

Check Also

நல்லூர் கந்தன் வீதிக்கு நேர்ந்த பரிதாபம்…யாழ் மாநகர சபை அதிகாரிகளின் பாராமுகம்..பெரும்அதிருப்தியில் பொதுமக்கள்…!

சரித்திரப் பிரசித்தி நல்லைக் கந்தனின் வடக்கு வீதியில் துர்க்கா மணி மண்டபத்திற்கு நேரெதிராக கிழக்கு நோக்கிச் செல்லும் வீதியே இது.அதிகாரிகளின் …