Breaking News
Home / latest-update / அமலாபால் பாணியில் ஆண்ட்ரியா
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அமலாபால் பாணியில் ஆண்ட்ரியா

நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி வரும் ‘கா’ படம் முழுக்க முழுக்க அடர்ந்த வனப்பகுதிக்குள் படமாக்கியுள்ளனர்.

அமலாபால் பாணியில் ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா, அமலாபால்
ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் “கா”. கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைஃப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.

முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் சலீம்கோஸ் நடித்துள்ளார். “கா” என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். 30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இதுவரை யாரும் செல்ல முடியாத இடங்களுக்கு வன அலுவலகத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடித்தியிருக்கின்றனர்.

ஆண்ட்ரியா

அந்த காடுகளை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரம்மிப்பாக இருக்கும் எழில் கொஞ்சும் காட்டின் அழகை வித்தியாசமான ஒரு கோணத்தில் இதில் கண்டு ரசிக்கலாம் என்கிறார் இயக்குனர் நாஞ்சில். மேலும் அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அதோ அந்த பறவை போல’ படமும் முழுக்க முழுக்க வனப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 27-ந் தேதி திரைக்கும் வருகிறது.

Check Also

தர்பார் படத்தின் இசை வெளியிடும் தேதி அறிவிப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தர்பார் படத்தின் இசை …