சுவையான மிளகுக் குழம்பு!!!!

மிளகு உடலுக்கு மிகவும் சிறந்த ஒன்று. இது சளி, இருமல் ஆகியவற்றிற்கு மிகவும் சிறந்தது. மேலும் இந்த மிளகை குளிர்காலத்தில் குழம்பு வைத்து சாப்பிட்டால், உடலுக்கு சூடு கொடுக்கும். இது குழந்தை பெற்ற பெண்களுக்கு ஒரு சிறந்த பத்தியக் குழம்பு. அந்த மிளகுக் குழம்பை எப்படி செய்வதென்று பாருங்களேன்!!!
தேவையான பொருட்கள் :

மிளகு – 50 கிராம்
சீரகம் – 4 தேக்கரண்டி
தனியா – 3 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 3
புளி – சிறிது
பெருங்காயம் – சிறிது
கடுகு – சிறிது
கறிவேப்பிலை – 6 கொத்து
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் ஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய்யை விட்டு, எண்ணெய் காய்ந்ததும் மிளகு, சீரகம், தனியா, மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு நன்கு வறுக்க வேண்டும்.

பின் அவற்றை ஒரு தட்டில் போட்டு ஆற வைக்கவும். ஆறியதும் மிக்ஸியில் இவை அனைத்தையும் போட்டு, அத்துடன் புளி மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து தண்ணீர் விட்டு நைசாக அரைக்க வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும். பின் கடுகு நன்கு வெடித்ததும் அதில் அரைத்த கலவையை சேர்த்து கிளர வேண்டும்.

கலவை நன்கு கொதித்து, கெட்டியாகி அதில் உள்ள எண்ணெய் ஆனது பிரியும் நிலையில் இருக்கும். அந்த சமயத்தில் இறக்கி விடவும்.

இப்போது சுவையான காரசாரமான மிளகுக் குழம்பு தயார்!!!

இந்த மிளகுக் குழம்பை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

Special Recent Posts

நட்புடன் பழகிய தோழிக்கு நடந்த விபரீதம்

நட்புடன் பழகிய தோழிக்கு நடந்த விபரீதம்

May 19th, 2013

தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த தோழியை, கத்தியால் குத்திய மாணவியை பொலிசார் கைது செய்தனர[...]

அளவெட்டியில் தந்தையால் மூவர் கொலை: வழக்கு ஆவணங்கள் நீதியமைச்சருக்கு மாற்றம்

அளவெட்டியில் தந்தையால் மூவர் கொலை: வழக்கு ஆவணங்கள் நீதியமைச்சருக்கு மாற்றம்

May 19th, 2013

தந்தையால் பெண் பிள்ளைகள் மூவர் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தந்தைக்கு எதிரான வழக்[...]

106வது வயதில் திருமண பந்தத்தில் இணைந்த அவுஸ்திரேலியா பெண்

106வது வயதில் திருமண பந்தத்தில் இணைந்த அவுஸ்திரேலியா பெண்

May 19th, 2013

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் 106ஆவது வயதில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். மர்ஜோரி[...]

ஐதராபாத் அணியை தோற்கடிக்குமாறு காம்பீரிடம் கேட்பேன்: விராட் கோலி

ஐதராபாத் அணியை தோற்கடிக்குமாறு காம்பீரிடம் கேட்பேன்: விராட் கோலி

May 19th, 2013

பெங்களூரில் நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றத[...]

கோஹ்லி அதிரடியால் பெங்களூர் அபார வெற்றி: 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது சென்னை

கோஹ்லி அதிரடியால் பெங்களூர் அபார வெற்றி: 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது சென்னை

May 19th, 2013

ஐ.பி.எல் தொடரின் 70வது லீக் போட்டியில் றொயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எ[...]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*