Breaking News
Home / latest-update / உலகில் முதலாவது தனி இந்து சாம்ராஜ்ஜியத்தை நிறுவும் முயற்சியில் சாமியார் நித்தி…?
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

உலகில் முதலாவது தனி இந்து சாம்ராஜ்ஜியத்தை நிறுவும் முயற்சியில் சாமியார் நித்தி…?

இந்தியாவில் வலைவீசித் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா தனிநாடொன்றை அறிவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அவரது பக்தர்கள் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளனர்.ஈக்வடோரில் வாங்கியுள்ள தனித் தீவுக்கு கைலாஷ் நாடு எனப் பெயரிட அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான நித்தியானந்தா, அதன் பின்பு என்ன ஆனார், எங்கு இருக்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. இருப்பினும் சமூக வலைத்தளங்கள் மூலமாக தனது சிஷ்யர்களுடன் நாள்தோறும் பேசி வரும் நித்தியாந்தா, தனது ஒருசில கருத்துகள் மூலம் பேசுபொருளாகி வருகிறார்.

இந்நிலையில், அவர் ஈகுவடோருக்கு பக்கத்தில் ஒரு குட்டித்தீவை வாங்கி இருப்பதாகவும், அதை பரிபூரணமான ஒரு இந்து நாடாக அறிவிப்பதற்கான முயற்சியில் இருப்பதாகவும் அவரது பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.இந்தியாவில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் அவர் மாற்றிக் கொண்டு விட்டார், ட்ரஸ்டுகளில் இருந்து விடுவித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.

அவர் ஈகுவடோரில் வாங்கியுள்ள தனித் தீவுக்கு கைலாஷ் நாடு எனப் பெயரிட உத்தேசித்துள்ளதாகவும், அந்த தீவில் நித்தியானந்தாவின் சீடர்கள் 100 அல்லது 200 பேர் மட்டுமே தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.அந்தத் தீவுக்கு நித்தியானந்தா நேபாளம் வழியாக சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.அவர் சத்ஸங்கம் என்கிற பெயரில் தினமும் மாலை 7 மணிக்கு யூடியூப்பில் நேரலையில் வந்து, பக்தர்களை சந்திப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது.

Check Also

அனைத்து பட்டதாரிகளுக்குக்கும் அரசாங்கத்துறையில் நியமனம்..!! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முக்கிய அறிவிப்பு..!

வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் சகல பட்டதாரிகளும் தேசிய பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிப்பை செய்யும் வகையில் துரிதமாக அரச பணிகளில் நியமிப்பதாக …