Published On: Tue, Jun 5th, 2012

கணவன்களே ஜாக்கிரதை.

Share This
Tags

ஒரு மாலை நேரம். ஆஃபீஸிலிருந்து கணவன் தனதுமனைவிக்கு ஃபோன் செய்து, “நீ செய்கிற மெதுவடை சாப்பிட டேஸ்ட்டாக இருக்கும். இன்னும் ஒரு மணிநேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுகிறேன். மெதுவடைகள் செய்துவை” என்றான். மனைவி “சரி” என்றாள்.

அதுபோலவே ஆஃபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்த கணவன், மனைவியிடம் “மெதுவடை எல்லாத்தையும் எடுத்து வா” என்றான். மனைவி ஒரு தட்டில் ஒரு மெதுவடையும் சட்னியும் கொண்டுவந்து கணவனிடம் கொடுத்தாள்.

வாங்கிப் பார்த்து அதிர்ச்சியான கணவன், “என்னடி, ஒரு வடைதான் இருக்கு.மற்றதெல்லாம் எங்கே?” என்று கேட்டான்.

அதற்கு மனைவி , “முதலில் ரெண்டு வடை சுட்டேன். நல்லாயிருக்கான்ன சாப்பிட்டுப் பார்த்தேன். அப்புறம் ரெண்டு வடை சுட்டேன். நல்லாயிருக்கான்னு சாப்பிட்டுப் பார்த்தேன். அப்புறம் ரெண்டு வடை சுட்டேன்.அதையும் சாப்பிட்டு விட்டேன். இப்படி எல்லா வடையையும் சாப்பிட்டுவிட்டு இந்த ஒரு வடையை மட்டும் உங்களுக்காக ஆசையோட எடுத்து வச்சிருக்கேன்” என்றாள்.

அந்தக் கணவன், “அடப்பாவி! எப்படி எல்லா வடையையும் சாப்பிட்டே!!!”என்றுஆச்சரியத்துடன் கேட்டான்.

அதற்கு “சிம்பிள்! முதல்ல ஒரு வடையை எடுத்தேன்.ரெண்டா பிய்த்தேன்.முதலில் ஒரு துண்டை வாயில போட்டு மென்னு சாப்பிட்டேன். அப்புறம் ரெண்டாவதுதுண்டை எடுத்தேன். வாயில போட்டு மென்னு சாப்பிட்டேன்.. அவ்வளவுதான்” என்று அந்த தட்டில் மீதமிருந்த ஒரு வடையையும் சாப்பிட்டுக்
காட்டினாளாம் மனைவி.

Leave a comment

XHTML: You can use these html tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

கருத்துக் கணிப்பு

செக்ஸ் இல்லாத காதல் சாத்தியமா?

View Results

Loading ... Loading ...