Breaking News
Home / latest-update / இன்றைய ராசிபலன் – 24.11.2019
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசிபலன் – 24.11.2019

மேஷம்

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றி அடையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

ரிஷபம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு வரும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்

வாழ்வின் எதிர்காலத்திற்கான புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் ஆதா யம் உண்டு. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் தேடிவரும். புதுமை படைக்கும் நாள்.




கடகம்

எதிர்பார்த்தவைகளில் சில விஷயங்கள் தள்ளிப்போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரைச் சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்

தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகனப்பழுதை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்க மாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கன்னி

கடந்த இரண்டு நாட்களாகக் கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணவரவு திருப்தி தரும். உறவினர்கள் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மகிழ்ச்சி தங்கும் நாள்.




துலாம்

ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். கணவன் மனைவிக்குள் வீண்கருத்து வேறுபாடு உருவாகும். வியா பாரத்தில் வேலையாட்களால், விரயம் வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகக் கிடைக்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்

வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்து கொள்ளவேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

தனுசு

எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிபெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சூட்ச்சமங்களை சற்று உணர்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் சிறப்பான நாள்.




மகரம்

எதையும் சமாளிக்கும், சாமர்த்தியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். பிள்ளைகளின் தேவையைப் பூர்த்திசெய்வீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்திவரும். உத்தியோகத்தில், அதிகாரியின் மத்தியில் உங்களை பற்றி நல்ல அபிப்பிராயம் உண்டாகும். உதவிகள் கிட்டும் நாள்.

கும்பம்

கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்தகூச்சல் குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தெளிவாக முடிவுகள் எடுப்பீர்கள். புதுப்பொருள் சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.




மீனம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் வீண் கோபத்தையும் மன உளைச்சலையும், குறையுங்கள் தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடிக்க முயற்சிசெய்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

Check Also

தர்பார் படத்தின் இசை வெளியிடும் தேதி அறிவிப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் இசை வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தர்பார் படத்தின் இசை …