Breaking News
Home / latest-update / இன்றைய ராசிபலன் – 23.11.2019
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசிபலன் – 23.11.2019

கடகம்

திட்டவட்டமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். துணிச்சல் மிகுந்த காரியங்களில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகளைக் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். வெற்றி கிட்டும் நாள்.

சிம்மம்

குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். அழகும், இளமையும் கூடும், தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். புதியவரின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். உத்தி யோகத்தில் உயர் அதிகாரியின் மதிப்பும், மரியாதையும் உங்களுக்கு கிடைக்கும். புதிய பாதையில் பயணிக்கும் நாள்.
கன்னி

ராசிக்குள் சந்திரன் இருப்பதால், சில காரியங்களைப் போராடி முடிப்பீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவரை அனுசரித்துப் போங்கள். முன்கோபத்தால் பகை உண்டாகும். டென்ஷனால் தலைவலிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் மாற்றிக் கொள்வது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

துலாம்

எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துச் செல்லுங்கள். வாகனப்பயணத்தில் கவனம் தேவை. முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

விருச்சிகம்

ஆன்மிக பெரியோரின் ஆசி கிட்டும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்களால், மற்றவர்கள் ஆதாயம் அடை வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். உத்தி யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.
தனுசு

உங்கள் செயல்கள் அனைத்தும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உங்களால் வளர்ச்சி அடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். சொந்த பந்தங்கள் சிலர் உங்களின் உதவியை கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும் நாள்.

மகரம்

கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள், மற்றும் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப் பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். தடைப்பட்ட விஷயங்கள் முடி யும் நாள்.
கும்பம்

சந்திராஷ்டமம் தொடர் வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். திடீரென தாழ்வு மனப்பான்மையும், மனக்கவலையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களைக் கடிந்து கொள்ளாதீர்கள். எதிர் பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

மீனம்

உங்களுடைய திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புக்கள் தேடி வரும். எதிர் பாலினத்தவர் உங்களுக்கு ஆதர வாக இருப்பார்கள். கல்யாண பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வாகனத்தைச் சரி செய்வீர்கள். உத்தி யோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

Check Also

யாழ் தெல்லிப்பளையில் திடீர் முற்றுகை…ஒரு தொகை போதைப் பொருளுடன் நால்வர் அதிரடியாக கைது..!!

வலிகாமம் வடக்கு- வித்தகபுரம் பகுதியில் வியாபாரத்திற்காக ஹெரோயின் போதைப் பொருளை பக்கெட்டுக்களில் அடைத்துக் கொண்டிருந்தபோது பொலிஸாா் சுற்றிவளைத்ததில் 2 பெண்கள் …