இந்திய மக்களில் பெரும்பாலானவர்களின் பாவனையிலுள்ள தகவல் பரிமாறச் சேவை வாட்ஸ் அப். பாதுகாப்பான செய்திப் பரிமாற்றம் கொண்டது வாட்ஸ் அப் என்பதுதான் அச் சேவை குறித்த பரப்புரையும், நம்பிக்கையும்.
ஆயினும் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் வாட்ஸ்அப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டாதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் இந்திய மத்திய அரசு, வாட்ஸ் அப் நிறுவனத்திடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பிருந்தது. இதற்கான விளக்கத்தினை, வாட்ஸ் அப் நிறுவனம் அளிக்கையில், இந்தியர்களின் வாட்ஸ்அப் தகவல்கள், இஸ்ரேலிய நிறுவனம் ஒன்றினால் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தை ஒத்துக் கொண்டதுடன், இதற்காக அந் நிறுவனம் மத்திய அரசிடம் வருத்தம் தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது.
மேலும் அவர்களது விளக்கத்தில், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் அதி உச்சப் பாதுகாப்பை வழங்குவதற்குரிய செயற்பாடுகளை வகுத்துள்ளதாகவும் தெரிவித்த வாட்அப் நிறுவனத்திடம், இனி வரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் நடைபெற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மத்திய அரசு எச்சரித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.