Breaking News
Home / latest-update / டிக்கிலோனா படத்தின் முக்கிய அப்டேட்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

டிக்கிலோனா படத்தின் முக்கிய அப்டேட்

சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வருகிறது டிக்கிலோனா. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.



சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் தயாரிக்கின்றனர்.

இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. பூஜையில் படத்தின் நாயகன் சந்தானம், நாயகிகள் அனகா, ஷிரின், தயாரிப்பாளர்கள் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டப்பாடி ஜே. ராஜேஷ், சோல்ஜர் பேக்டரி சினிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

டிக்கிலோனா படக்குழு



Check Also

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 52 பேர் தொடர்பில் வெளியான விசேட செய்தி…!

நேற்று நாட்டில் தொற்றுறுதியான 52 பேரில் 49 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களாவர் என இராணுவத் தளபதி லெப்டினன் …

error: Content is protected !!