வடக்கு மற்றும் கடலோர ரயில் சேவைகளில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.அதற்கமைய எதிர்வரும் 27ஆம் திகதியிலிருந்து குறித்த ரயில் சேவைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் தபால் ரயில் பிற்பகல் 6 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து பயணிப்பதோடு, அது மீண்டும் கொழும்பு கோட்டையிலிருந்து இரவு 9 மணிக்கு பயணிக்கும் என்றும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், பெலியத்த-மருதானை செல்லும் சீயுகாமி அதிவேக ரயிலானது திருத்தப்பட்ட அட்டவணையின்படி காலை 6.15 மணிக்கு பெலியத்தயில் இருந்து பயணிக்கவுள்ளது.அதேபோல, குறித்த ரயிலானது மருதானையிலிருந்து மாலை 3 மணிக்கு மீண்டும் பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.