Breaking News
Home / latest-update / பினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி

பிரபல மலையாள நடிகர் மம்முட்டி தமிழில் அழகன், தளபதி, மறுமலர்ச்சி, ஆனந்தம் மற்றும் சமீபத்தில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற பேரன்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் வெளியான யாத்ரா படத்தில் முன்னாள் ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடித்தார். இதன் மூலம் ஆந்திர ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.



இதுவரை 400-க்கும் மேற்பட்ட படங்களில் மம்முட்டி நடித்து இருக்கிறார். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வாழ்க்கையை ஒன் என்ற பெயரில் மலையாளத்தில் திரைப்படமாக எடுக்கின்றனர். இந்த படத்தில் பினராயி விஜயன் வேடத்தில் மம்முட்டி நடிக்கிறார். சந்தோஷ் விஸ்வநாத் இயக்குகிறார்.

இதில் ஸ்ரீனிவாசன், ஜோஜூ ஜார்ஜ், உன்னி கிருஷ்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படம் ரூ.50 கோடி பட்ஜெட்டில் தயாராவதாக கூறப்படுகிறது. படத்தின் முதல் தோற்றம் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டு படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒன் படத்தின் போஸ்டர்

Check Also

வரி ஏய்ப்பு புகார் எதிரொலி – ராஷ்மிகா நேரில் ஆஜராக உத்தரவு

வரி ஏய்ப்பு புகார் எதிரொலியாக நடிகை ராஷ்மிகா வீட்டில் நடந்த சோதனையைத்தொடர்ந்து விசாரணைக்காக அவரை நேரில் ஆஜராக வருமான வரித்துறை …