Breaking News
Home / latest-update / கிளிநொச்சியில் 16 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கிளிநொச்சியில் 16 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி – சேவியர்கடை சந்திப் பகுதியில் 16 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 16 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபரை மாங்குளம் பொலிஸார், கிளிநொச்சி பொலிஸாரிடம ஒப்படைத்துள்ளனர்.

கிளிநொச்சி, அம்பாள்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Check Also

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்

காஷ்மீரை கைப்பற்றுவது முதல் பல்வேறு விஷயங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டு …