Breaking News
Home / latest-update / ஊழியர்களுக்கு புத்துணர்வை அளிக்க மைக்ரொசொவ்ற் நிறுவனம் மேற்கொண்ட வித்தியாசமான முயற்சி..!! பெருமகிழ்ச்சியில் ஊழியர்கள்..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஊழியர்களுக்கு புத்துணர்வை அளிக்க மைக்ரொசொவ்ற் நிறுவனம் மேற்கொண்ட வித்தியாசமான முயற்சி..!! பெருமகிழ்ச்சியில் ஊழியர்கள்..!

மைக்­ரோசொப்ட் ஜப்பான் நிறு­வ­ன­மா­னது தனது ஊழி­யர்­க­ளுக்கு முழு­மை­யான ஊதி­யத்­துடன் வாரத்தில் 4 நாட்­க­ளுக்கு மட்­டுமே பணி­யாற்ற அனு­ம­தித்து மேற்­கொண்ட பரீட்­சார்த்த நட­வ­டிக்­கையின் போது நிறு­வ­னத்தின் விற்­பனை 40 சத­வீ­தத்தினால் உயர்ந்­துள்­ள­தாக தெரி­விக்கப்படுகின்றது .

அந்த நிறு­வனம் கடந்த ஆகஸ்ட் மாதத்­தி­லி­ருந்து தனது முழு நேர ஊழி­யர்­க­ளுக்கு முழு­மை­யான ஊதி­யத்­துடன் வாரத்தில் வெள்ளிக்­கி­ழ­மை­யி­லான விசேட விடு­முறை உள்­ள­டங்­க­லாக 3 நாட்கள் விடு­மு­றையை வழங்கி மேற்­படி பரீட்­சார்த்த நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டி­ருந்­தது.அத்­துடன் ஊழி­யர்­க­ளு­ட­னான கூட்­டங்­க­ளுக்­கான நேரம் ஆகக்கூ­டு­த­லாக 30 நிமி­டங்­க­ளாக வரை­யறை செய்­யப்­பட்­ட­துடன் நேரடிக் கலந்­து­ரை­யா­டல்க­ளுக்குப் பதி­லாக இணை­யத்­தளம் மூல ­மான கலந்­து­ரை­யா­டல்­களை மேற் ­கொள்ள ஊக்­கு­விக்­கப்­பட்­டது.வாரத்தில் 3 நாட்கள் விடு­மு­றை­யை வழங்­கி­யமை ஊழி­யர்கள் களைப்­ப­டை­வதைக் குறைத்து அவர்­களின் உற்­பத்தித் திறனை அதி­க­ரிப்­ப­தாக உள்ளதாக மைக்ரோசொப்ட் ஜப்பான் நிறுவனம் தெரிவிக்கிறது.உலகில் அதிக மணித்தியால பணி நேரத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஜப்பான் உள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Check Also

யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு : கவலை வெளியிட்டுள்ள வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு நிலவுவதாக அதன் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் குருதி கொடையாளர்கள் இரத்ததானம் …

error: Content is protected !!