Breaking News
Home / latest-update / டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் பேட் கம்மின்ஸ்க்கு ஓய்வு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் பேட் கம்மின்ஸ்க்கு ஓய்வு

டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் பேட் கம்மின்ஸ்க்கு ஓய்வு

பேட் கம்மின்ஸ்
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது

3-வது மற்றும் கடைசி போட்டி பெர்த்தில் நாளை மறுநாள் நடக்கிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இடம் பிடித்திருந்தார்.

டி20 கிரிக்கெட் தொடர் முடிந்த உடன் 21-ந்தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடருக்கு சிறந்த முறையில் புத்துணர்ச்சியுடன்  தயாராகுவதற்காக பேட் கம்மின்ஸ்க்கு 3-வது டி20 போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

2-வது போட்டி நடைபெற்ற கான்பெர்ராவில் இருந்து பெர்த்துக்கு செல்ல நீண்ட நேரம் ஆகும். இதனால் அவரது சொந்த நகரான சிட்னிக்கு திரும்பும்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கேட்டுள்ளது.

Check Also

சற்று முன்னர் மேலும் 39 பேருக்கு கொரோனா….! எண்ணிக்கை 1317

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1317ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 1278 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் …

error: Content is protected !!