Breaking News
Home / latest-update / வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவி! பரிசோதனையில் வெளிவந்த விடயம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவி! பரிசோதனையில் வெளிவந்த விடயம்

திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோமரங்கடவல – கல்கடவல பகுதியைச் சேர்ந்த குமாரசிங்க முதியன்சலாகே பிரியந்த ரஞ்சித் (46 வயது) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருகையில்,

பாதிக்கப்பட்ட மாணவி பாடசாலைக்கு சென்ற போது அங்கு வைத்து வாந்தியெடுத்துள்ளார். இந்த நிலையில் அவர் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் மாணவி மேலதிக பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது அவர் கர்ப்பம் தரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சிறுமியின் வாக்குமூலத்தைப் பெற்றுக் கொண்டு சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

Check Also

யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு : கவலை வெளியிட்டுள்ள வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு நிலவுவதாக அதன் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால் குருதி கொடையாளர்கள் இரத்ததானம் …

error: Content is protected !!