Breaking News
Home / latest-update / யாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவனின் தற்கொலைக்கு காரணம் யார்…?? பேராசிரியர்களின் பழிவாங்கலா..?
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

யாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவனின் தற்கொலைக்கு காரணம் யார்…?? பேராசிரியர்களின் பழிவாங்கலா..?

காலந்தோறும் பட்டதாரிகளை உருவாக்கதவறாத பல்கலைக்கழகங்கள் காலத்திற்கு காலம் பெறுமதியான உயிர்களையும் பலியெடுத்துவிடுகின்றன. இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடமும் விதிவிலக்கல்ல.இரண்டுதினங்களுக்கு முன்னர் பல்கலை விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவன் நேற்றையதினம் அழுகிய உடலாக மீட்கப்பட்டு இன்றையதினம் இறுதிக்கிரியைகள் நடந்தேறியுள்ளது.குறித்தமாணவன் மன்னாரைச் சேர்ந்தவர். இலங்கையின் கல்வித்தரத்தில் சற்றுப்பின்னுக்கு நிற்கின்ற மாவட்டமான மன்னார் மாவட்டத்திலிருந்து, கனவுகளோடு பல போட்டிகளின் மத்தியிலும் சவால்களிலும் கல்வி கற்று நான்கு வருடங்களைப்பூர்த்தி செய்து ஒரு பயில்நிலை மருத்துவராக வெளிவர சில மாதங்கள் உள்ள நேரத்தில் இம்மாணவனின் விபரீத முடிவு அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

கடந்தவருடத்திலும் இதே காலப்பகுதியில் ஒரு மருத்துவபீட மாணவன் தற்கொலை செய்துள்ளதாக செய்திகள் வருகின்றது. நான் பல்கலைக்கழகத்தில் கற்கின்ற காலத்தில் எனது நினைவுக்கு எட்டிய வகையில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். அதில் இருவர் மருத்துவபீட மாணவர்கள் அதன் பின்னரும் பல்கலை மாணவர்களது தற்கொலை குறைந்த பாடில்லை. அது தொடர்கதையாக மாறியுள்ளது.இரண்டு தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் சாவிற்கு மருத்துவபீட நிர்வாகமே காரணம் என குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணமுள்ளன. இந்தக்குற்றச்சாட்டை உறுதி செய்யுமாப்போல் உள்ளது கடந்த கால தற்கொலைகள். மருத்துவ பீட நிர்வாகத்தின் தளர்வற்ற இறுக்கமான செயற்பாடுகளால் சரியான காலப்பகுதியில் எழுத வேண்டிய பரீட்சைகளை சில மாணவர்கள் எழுத அனுமதிக்கப் படுவதில்லை. இதனால் சில மாணவர்கள் மனமுடைந்து தற்கொலைக்கு முடிவெடுத்துவிடுகிறார்கள். இரண்டுதினங்களுக்கு முன் மரணித்த மருத்துவ பீட மாணவன் ஒரு பல்துறை ஆற்றல் உள்ளவனாம். விளையாட்டில் மிகுந்த ஈடுபாடுடைய ஒருவன் மனஉளைச்சலில் தற்கொலை செய்ய முடிவெடுப்பதென்பது ஆகப்பிந்திய அபத்தம்.காரணம் விளையாட்டுக்கள் மனஅழுத்தங்களை சீராக்க/ விடுபட சிறந்த மருந்து என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். அப்படியாயின் இந்த மாணவனுக்கு ஆற்றுப்படுத்தக்கூடிய சக நண்பர்கள் இல்லையா?

இரண்டு நாட்களுக்கு முன் தனது அறையில் தற்கொலை செய்து கொண்டால், அவனை அவனுடைய நண்பர்கள் தேடவில்லையா? அவனது குடும்பம் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லையே என்று அங்கலய்த்து வேறு மாணவர்களைத்தொடர்பு கொள்ளவில்லையா? அறையிலிருந்து அழுகிய உடலின் மணம் வரும்வரை அவ்விடத்திற்கு யாருமே செல்லவில்லையா?

இவ்வாறு பலகேள்விகளை விட்டுச்செல்கிறது குறித்த மாணவனின் தற்கொலை.மன உளைச்சல், விரக்தி,ஏமாற்றம், தோல்வி, ஆற்றாமை என்பவற்றுக்கு தீர்வு தற்கொலைதானா? என்றால் உறுதியாக இல்லை என்பேன். சாகிறதுக்கு ஆயிரம் வழிகள் இருக்கும்போது, மேற்சொன்ன துயரங்களிலிருந்து விடுபட்டு வாழ்க்கையில் எதிர் நீச்சலடிக்க ஒருவழியாவது இருக்காமலா போய்விடும்?  அந்த ஒருவழியைத்தேடிக்கண்டுபிடித்துவிட்டால், தற்கொலைகள் அருகிப்போய்விடும்.
அந்த வழியைத்தேடுங்கள் வாழ்வில் வெற்றியும் கிட்டும்.

இவ்வாறான பழிவாங்கல் நடவடிக்கைகள் யாழ் பல்கலைக்கழகத்தில் அதிகமாகவே நடைபெறுகிறது. ஆண் மாணவர்களுக்கு பாடங்களை fail ஆக்குவதும், பெண் மாணவிகளுக்கு Fail போட்டுவிட்டு Pass ஆக வேண்டுமென்றால், படுக்கைக்கு வர வேண்டும் என்ற மிரட்டல்களும் தொடர்கிறது. இந்தக் குற்றச்சாட்டில் சில பேராசிரியர்கள் யாழ் பல்கலைக்கழகத்தை விட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

அரசியல்வாதிகளின் எடுபிடிகளாக செயற்பட்டு, மக்களை குழப்புவதை விட்டுவிட்டு இவ்வாறான விடயங்களுக்காவது, பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குரல் கொடுக்க வேண்டும்.அந்த பழிவாங்கிய பேராசிரியர்களுக்கு இதே நிலை வரவேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திப்போமாக!

மன்னார் மண் ஒரு மருத்துவனை இழந்து தவிக்கிறது என்பது மறுக்கமுடியாத துயரம்.

ஆழ்ந்த அனுதாபங்கள் …

-நம்ம யாழ்ப்பாணம்

Check Also

இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு

இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், வரும் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒரு …