Breaking News
Home / latest-update / கணவனை பயமுறுத்த தீக்குச்சியை பற்ற வைத்த குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கணவனை பயமுறுத்த தீக்குச்சியை பற்ற வைத்த குடும்பப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…!!

கணவனை பயப்படுத்துவதற்காக தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குச்சியை தட்டிய போது தவறுதலாக ஏற்ப்பட்ட தீ உடல் முழுவதும் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பப் பெண் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த பெண் 5 பிள்ளைகளின் தாயான புதிய சோனகத் தெருவில் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த முர்ஜூதா பாஜீத் வயது 33 என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராவார்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ;

கடந்த 28 ஆம் திகதி மேற்படி பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் இடையில் குடும்ப பிரச்சனை இடம்பெற்றது இதன்போது மேற்படி பெண் மண்ணெண்ணெய் தனக்கு மேல் ஊற்றி தீக்குச்சியை தட்டி கணவனை பயபப்டுத்தியுள்ளார். தட்டிய தீப்பற்றினால் உடல் முழுவதும் பாரிய தீக்காயம் ஏற்பட்டது.உடனடியாக அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று கணவன் அனுமதித்திருந்தார். எனினும் மேற்படி குடும்பப்பெண் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார்.உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Check Also

இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு

இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், வரும் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒரு …