Breaking News
Home / latest-update / பண்டத்தரிப்பு சில்லாலையில் மாட்டிய பெரும்தொகை கஞ்சா..!! இருவர் அதிரடியாகக் கைது..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பண்டத்தரிப்பு சில்லாலையில் மாட்டிய பெரும்தொகை கஞ்சா..!! இருவர் அதிரடியாகக் கைது..!

வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட சில்லாலையில் 120 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் இருந்து சில்லாலை சுமார் 16.9 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.இது தொடர்பாக சந்தேநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறிய ரக பாரவூர்தி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் சிறப்புப் போதைப் பொருள் தடுப்புக் காவல்துறை பிரிவு தெரிவித்தது.சிறிய ரகப் பாரவூர்தி ஒன்றில் இருந்ததே கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் சிறப்புப் போதைப் பொருள் தடுப்புக் காவல்துறைப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்தே இந்தக் கைது நடவடிக்கை நடந்துள்ளது.எமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறிய ரக பாரவூர்தியில் கஞ்சா கடத்தப்பட்டபோது கைப்பற்றப்பட்டது. அதில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டனர்’ என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட இருவரும் வட்டுக்கோட்டைக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.வட்டுக்கோட்டைக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்

காஷ்மீரை கைப்பற்றுவது முதல் பல்வேறு விஷயங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டு …