Breaking News
Home / latest-update / ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் மகத்துவம் நிறைந்த விளக்கம் இது தான்…
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் மகத்துவம் நிறைந்த விளக்கம் இது தான்…

“ஓம்“ என்பதன் விளக்கம்

“ஓம்“ என்பது அடிப்படையான முதல் நாதம். அகிலம் அனைத்தும் அதனின்றும் உற்பத்தியானது. ஓம்காரம் அ, உ, ம என்னும் மூன்று பாகங்களைக் கொண்டது.உச்சரிக்கக் கூடிய அனைத்து ஒலிகளும் ஓங்காரத்தில் அடங்கியுள்ளன.ஏனெனில் அவையனைத்தும் “அ“ இல் தொடங்கி “உ“ இல் தொடர்ந்து “ம“ இல் முடிகின்றன. எனவே ஓம்காரமானது அனைத்துக் காலங்களிலும் இறைவனை விளக்கும் அனைத்துச் சொற்களையும் குறிக்கின்றது.“ஓம்” நிசப்தத்தில் பூரணமடைகிறது.கடவுளைப் பற்றிய விளக்கமும் நிசப்தத்திலேயே நிறைவு பெறுகிறது.அமைதியை அடையும் வரையில் ஓம்காரத்தை ஓதும் முறை.சர்வரூப, சர்வகுண சம்பன்னனாக இறைவனைத் தியானித்து முடிவில் மேலான பரம்பொருளை தனி முதலை அடையும் முறையாகும்.

ஓம் மேலும் சிறு விளக்கம்:ஓம் என்பது பிரணவ மந்திரம். இதுதான் சக்தியின் ஆதார சுருதி. ஓசை எல்லாம் அடங்கிப் போய் பிரம்ம முகூர்த்த காலமான விடியற்காலையில் காதுகள் இரண்டையும் விரல்களால் இறுக மூடிக்கொண்டால் இந்த சுருதியின் அனுபவத்தை உணரலாம். இசை இலக்கணத்தில் “ஸா-பா“ சுருதிக்கு இதை ஒப்பிடலாம்.”ஓம்” என்னும் மந்திரம் பிராணாயமத்தின் விளைவை உச்சரிப்பவர்களுக்கு த் தருகின்றது.” ஓம்” என்று சொல்லும் போது வயிறு சுருங்கி, மூச்சு , வெளியாகி மீண்டும் உள்ளே செல்வதை உணரலாம்.

”ஓம்” எனும் மந்திரத்தின் ஒலி அலைகளை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து பார்த்ததில் அவை ரத்த அழுத்தத்தைச் சமன்படுத்துவதாகவும் மன அமைதியைத் தருவதாகவும் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது.“ஓம்“ எனும் மந்திரத்தை உணர்ந்து சொன்னால் படிப்பியாக மனம் ஒரு நிலைப் படுவதை உணரலாம்.

ஓம் என்பதன் அர்த்தங்கள்:ஓம் என்பதற்கு 100 இற்கும் அதிகமான அர்த்தங்கள் உள்ளன. அவற்றில் சில கீழே தரப்பட்டுள்ளன.ஓம் என்ற சொல் மந்திரங்களின் ஆதார சுருதி.ஓம் பிற மந்திரங்களின் முன்னோடியாக வரும் பீஜ மந்திரம்.

ஓம் என்ற சொல்லில் இருந்து தான் பிற மந்திரங்கள் பிறந்தன.ஓம் படைப்பு கடவுள் பிரம்மனின் நாத வடிவம்.ஓம் முழுமுதலைக் குறிக்கிறது.ஓம் முழுமையைக் குறிக்கும்.ஓம் என்பது படைக்கும் கடவுள் பிரம்மன், காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் ஆகிய மூவருக்கும் பொதுவானது.ஓம் என்பதே சுற்றிக்கொண்டேயிருக்கும் பூமிக்கடவுளின் சங்கித சுதியுடன் சேர்ந்த ஒலி.ஓம் என்ற சொல் உச்சரிப்பு ஞான மந்திரத்தின் திறவுகோல்.

ஓம் என்ற சொல் உச்சரிப்பு அலையும் மனதை ஒருமுகப்படுத்தும்விந்தையைச் செய்கிறது.ஓம் என்னும்போது ஆத்மாவின் இருப்பிடமான இதயத்திலிருந்து 108 நாடிகளும் இயங்குகின்றன.

Check Also

இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு

இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், வரும் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒரு …