Breaking News
Home / latest-update / மிக முக்கிய முடிவிற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் முகாமிட்டுள்ள வடக்கு, கிழக்கின் அரசியல் கட்சிகளின் தலைவர்கள்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

மிக முக்கிய முடிவிற்காக யாழ். பல்கலைக்கழகத்தில் முகாமிட்டுள்ள வடக்கு, கிழக்கின் அரசியல் கட்சிகளின் தலைவர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பொது நிலைப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் வடக்கு – கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், சிவில் சமூகம் மற்றும் சர்வ மத தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

முயற்சியின் நான்காவது முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பிற்காக தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளிற்கும் இடையிலான சந்திப்பு சற்று முன்னர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு அண்மையாகவுள்ள விடுதியில் ஆரம்பமாகியது.

இந்த சந்திப்பில் யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுடன், இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்ந்தன், வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் பொ.கஜேந்திரகுமார், செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஸ், ஈ.பீ.ஆர்.எல்.எவ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அதன் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.அருந்தவபாலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இன்றைய சந்திப்பில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். சின்மய மிஷன் வதிவிட சுவாமிகள், யாழ். பல்கலைக்கழக அரசறிவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எஸ்.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் எஸ்.ஜோதிலிங்கம் உள்ளிட்டோரும் இணைந்திருந்தனர்.

இன்றைய சந்திப்பில் கட்சிகள் பொது இணக்கப்பாட்டிற்கு வந்தாலும், வரைபு எதிலும் கையெழுத்திடும் வாய்ப்பில்லையென்றே கூறப்படுகிறது.

த.தே.கூட்டமைப்பு உத்தியோகப்பற்றற்ற முறையில் ஐக்கிய தேசியக் கட்சியை அல்லது சஜித்தை ஆதரிக்கும் நிலை உள்ளதால் பொது இணக்கத்திற்கு வந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையெழுத்து இடுமா என்பதில் சந்தேகம் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எது எப்படி இருந்தாலும் 2019 ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிப்பதற்கான திட்ட வரைபு எதிலும் கையெழுத்திடும் வாய்ப்பு குறைவு என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Check Also

அரசாங்கத்தின் முடிவுகளை தாமதமாக்கும் வணிக வங்கிகளால் சர்ச்சை

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சீரமைத்துக்கொள்ளும் வகையில் அரசாங்கம் அறிவித்த கடன்களை செலுத்தும் கால அவகாச நீடிப்பு உட்பட்ட நிதி நிவாரணங்கள் …

error: Content is protected !!